“2035ல் 257 கோடி இஸ்லாமியர்கள்” : உலகளவில் முதலிடம், ஆய்வறிக்கை தகவல், 2வது இடத்திற்கு சரியும் கிறிஸ்தவர்கள்..!

2035ம் ஆண்டு வாக்குல உலக அளவில் முஸ்லிம்களோட எண்ணிக்கை 257 கோடியா அதிகரிச்சு, உலகின் மிகப்பெரிய மதமாக இஸ்லாம் மாறும் அப்படின்னு, ஆய்வறிக்கையில தெரிவிக்கப்பட்டு இருக்கு.
 research report indicates that by around 2035, the global Muslim population will grow to 2.57 billion,
research report indicates that by around 2035, the global Muslim population will grow to 2.57 billion,source:thamizhalai,ai generated
2 min read

உலக மக்கள்தொகை 830 கோடி

உலக அளவில் மக்கள் தொகை எண்ணிக்கை அப்படிங்கறது 830 கோடி என்ற அளவில் இருக்கு. 148 கோடி மக்கள்தொகையோட இந்தியா முதலிடத்திலும், 141 கோடி மக்கள்தொகையோட சீனா இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன.

2035ல் மக்கள்தொகை கணிப்பு

இந்தநிலையில தான் பியு ஆராய்ச்சி மையம் 2035ல மக்கள்தொகை எப்படி இருக்கும் அப்படின்னு, ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டு இருக்கு. அதன்படி, 2035ம் ஆண்டு உலகளவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 257 கோடியாக அதிகரிச்சு, உலகின் மிகப்பெரிய மதமாக இஸ்லாம் மாறும் அப்படின்னு சொல்லுது.

பின்தங்கும் கிறிஸ்தவர்கள்

இப்போ உலக அளவில் மக்கள்தொகை எண்ணிக்கையில முதலிடத்தில இருக்கிற கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2035ம் ஆண்டு 252 கோடியாக இருக்கும், அப்படின்னும் ஆய்வறிக்கை தெரிவிக்குது.

முதலிடம் பெறும் முஸ்லிம்கள்

2020 முதல் 2070 வரையிலான காலகட்டத்தை அடிப்படையா கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வின் மூலம முக்கிய விவரங்கள் கிடைச்சு இருக்கு.

2020ல முஸ்லிம்கள் எண்ணிக்கை 202 கோடியா இருந்துச்சு. இது 2035ல 227 கோடியாக இருக்கும். 2070 அவங்களோட மக்கள்தொகையானது 360 கோடியா உச்சம் தொடும்.

2020ல கிறிஸ்வர்களோட எண்ணிக்கை 227 கோடியாகும். இது 2070ம் ஆண்டு வாக்கில 300 கோடிக்கு குறைவாகவே இருக்கும் அப்படின்னு மதிப்பிடப்பட்டு இருக்கு.

பிறப்பு விகிதம் அதிகமாக உள்ளது

மக்கள்தொகை அதிகரிப்பிற்கான காரணம் என்ன அப்படின்னு பார்த்தோம்ன்னா, உலக அளவில இஸ்லாமியர்களோட பிறப்பு விகிதம் என்பது அதிகமாகவே இருக்கு. மற்ற மதங்களை ஒப்பிடும் போது, இதன் எண்ணிக்கை 2 மடங்கா இருக்கு.

எப்படின்னு பார்த்தீங்கன்னா, ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு 3 புள்ளி 1 என்ற குழந்தைகள் என்ற எண்ணிக்கையில மக்கள் தொகையான அதிகரிச்சு வருது.

கிறிஸ்தவப் பெண்களுக்கு 2.5 குழந்தைகள் பிறப்பதாகவும், மற்ற மதங்களின் சராசரி 1.6 ஆக உள்ளது.

முஸ்லிம்களில் இளைஞர்கள் அதிகம்

உலகளவில் மற்ற மதத்தினரை ஒப்பிடும்போது முஸ்லிம் மக்கள் தொகையில் இளைஞர்களின் விகிதம் அதிகமாக உள்ளது. இது எதிர்கால மக்கள் தொகை வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருக்குதாம்.

தற்போதைய போக்கு தொடர்ந்தால், 2070ம் ஆண்டில் இந்தோனேசியாவை முந்தி பாகிஸ்தான் உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வாழும் நாடாக மாறும்.

அதற்கு அடுத்த இடங்களில் இந்தியா, நைஜீரியா மற்றும் இந்தோனேசியா நாடுகள் இருக்கும்.

இந்தியாவில் அதிகரிக்கும் முஸ்லிம்கள்

சரி இப்போ இந்தியாவோட நிலைய பார்ப்போம். 2020ல 15.2% ஆக இருந்த முஸ்லிம்களின் மக்கள் தொகை விகிதம் 2070ல் 19.6% ஆக உயரும்.

இந்துக்கள் எண்ணிக்கை குறையும்

அதே சமயம், இந்துக்களின் எண்ணிக்கை 17.6 கோடி அதிகரித்தாலும், மொத்த மக்கள் தொகையில் அவர்களின் விகிதம் 79.4% லிருந்து 75.8% ஆகக் குறையும் அப்படின்னு புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

ஐரோப்பாவில் இரட்டிப்பாகும் முஸ்லிம்கள்

ஐரோப்பாவில் முஸ்லிம்களின் விகிதம் 2020ல வெறும் 6% ஆக இருந்துச்சு. 2070 அது 13% ஆக உயர்ந்து இரட்டிப்பாகும். ஆப்பிரிக்க நாடுகளிலும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்கள் தொகை மிக வேகமாக வளரும்.

இந்தியாவில் அடுத்த 50 ஆண்டுகளில் இந்துக்கள் மக்கள்தொகை விகிதம் குறையும் என்றும், முஸ்லிம் மக்கள்தொகை விதிகம் அதிகரிக்கும் அப்படின்னு தெரிய வருது.

2070ல இந்தியாவில இந்துக்களின் மக்கள்தொகை விகிதம் 75 புள்ளி 8 சதவீதமாக இருக்கும். அதேசமயம் இப்போ 15 புள்ளி 2 சதவீதமா இருக்கிற முஸ்லிம்களின் எண்ணிக்கை 19 புள்ளி 6 சதவீதமா அதிகரிக்கும்.

உலக அளவில பார்த்தோம்ன்னா, சுமார் 33 கோடியே 35 லட்சம் முஸ்லிம்களை கொண்ட 2வது பெரிய நாடா இந்தியா இருக்கும்.

உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருக்கிற இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமான இந்துக்கள் வசிக்கிறாங்க. நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட பிற நாடுகளில் 6.5 கோடி இந்துக்கள் இருக்காங்க.

வரும் ஆண்டுகளில இவங்களோட மக்கள்தொகை அதிகரிச்சாலும், முஸ்லிம்களோட ஒப்பிடும் போது வளர்ச்சி விகிதம் குறைவாகவே இருக்கும்.

2070ல் இந்தியாவில் 130 கோடி இந்துக்கள்

2070-ல் இந்தியாவில் இந்துக்கள் எண்ணிக்கை 130 கோடியாவும் உலகளவில் 140 கோடியாகவும் அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டு இருக்கு.

=================