டாலரை ஒதுக்கிய நாடுகள் : பிரிக்ஸ் ஆலோசனை கொடுத்த ரிசர்வ் வங்கி!

சர்வதேச பொருளாதாரம் மேற்கொள்ள, வணிக பண பரிமாற்றத்தில் இன்றைய நாட்டு நாணயங்களில் அமெரிக்க நாட்டின் டாலர் முதன்மை வகித்து வருவதால், டாலர் ஆதிக்கத்தை குறைக்கு மற்ற நாடுகள் முனைப்பு காட்டி வருகிறது.
Reserve Bank has suggested that BRICS Digital Currency group of countries could unite to reduce dominance of US dollar
Reserve Bank has suggested that BRICS Digital Currency group of countries could unite to reduce dominance of US dollarSource : BRICS Summit
2 min read

அமெரிக்க டாலரின் மதிப்பு

RBI Suggestion on BRICS Digital Currency System : உலக அளவில் வலிமையான நாணயமாக அமெரிக்க டாலர் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பொருட்களை உலக நாடுகள் டாலரை கொடுத்து தான் வாங்க வேண்டி இருக்கிறது.

ஆட்டிப் படைக்கும் அமெரிக்க டாலர்

எனவே பல்வேறு நாடுகளும் தங்களுடைய நாணயத்தை கொடுத்து டாலரை வாங்கி பின்னர் அந்தப் பணத்தில் கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை வாங்க வேண்டி இருக்கிறது, இதுவே தற்போதைய நிலவரமாக இருந்து வருகிறது.

டாலரை குறைக்கும் நாடுகள்

அதாவது சர்வதேச வர்த்தகத்திற்கு அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது என்பதே நிதர்சணமான உண்மை. இதனால் தான் உலக அளவில் வலிமைமிக்க ஒரு நாணயமாக டாலர் இருந்து வருகிறது,

ஓங்கி இருக்கும் அமெரிக்காவின் கை

இதுவே பல்வேறு விவகாரங்களிலும் அமெரிக்காவின் கை ஓங்கி இருப்பதற்கும் காரணமாக இருக்கிறது. ஆனால் பல்வேறு நாடுகளும் தற்போது விழித்து கொண்டன.

டாலரை வீழ்த்த உலக நாடுகள் முனைப்பு

உலக அளவில் டாலரின் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் என்பதிலும் டாலரை சார்ந்து இருப்பதை தவிர்க்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கின்றன.இதனை முதலில் தொடங்கி வைத்தது சீனா என்றே கூறலாம்.

தங்கத்தை குவிக்கும் சீனா

சீனா அதிக அளவு தங்கத்தை வாங்கி டாலரின் மதிப்பை குறைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கியுள்ளது. இதற்கிடையே இந்தியாவும் தற்போது டாலர் வர்த்தகத்தை சார்ந்து இருப்பதை குறைப்பதற்கு முடிவு செய்து பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் டிஜிட்டல் நாணயங்களை ஒருங்கிணைக்க யோசனை தெரிவித்துள்ளது.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகள்

பிரிக்ஸ் என்பது பிரேசில், ரஷ்யா ,இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்த கூட்டமைப்பு. அண்மையில் இந்த கூட்டமைப்பில் ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்தது.

டிஜிட்டல் கரன்சிகள்

இந்த பிரிக்ஸ் நாடுகளின் டிஜிட்டல் கரன்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் இந்த உறுப்பு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், சுற்றுலா தொடர்பான பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ளலாம் என்றும் டாலரை சார்ந்து இருப்பதை குறைக்க முடியும் என்றும் ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது.

டிரம்பின் வர்த்தகப் போர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் மீது கடுமையான வர்த்தக போரை தொடுத்து இருக்கிறார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பை விதித்திருக்கிறார்.

பிரிக்ஸ் நாடுகள் பாதிப்பு

இதுவரை இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தமும் முடிவாகவில்லை. இந்த சூழலில் டிரம்பின் வரிவிதிப்பு கொள்கையால் பிரிக்ஸ் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பிரிக்ஸ் ஆலோசனை கொடுத்த ரிசர்வ் வங்கி

எனவே பிரிக்ஸ் அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் டிஜிட்டல் நாணயங்களுக்குள் ஒருங்கிணைப்பை கொண்டு வர வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆலோசனை தெரிவித்துள்ளது.

இந்தியா தலைமையில் பிரிக்ஸ் மாநாடு

இந்த ஒருங்கிணைப்பு வந்துவிட்டால் இந்த நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்திற்கு அமெரிக்க டாலரை சார்ந்து இருக்க வேண்டிய தேவையில்லை. இந்த ஆண்டு இந்தியா தலைமை ஏற்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டினை நடத்த இருக்கிறது.

இந்த மாநாட்டின் போது இது தொடர்பான முக்கியமான முடிவு எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே பிரிக்ஸ் கூட்டமைப்பு அமெரிக்காவுக்கு எதிரான ஒரு அமைப்பு என அதிபர் டிரம்ப் விமர்சனம் செய்திருக்கிறார்.

வளர்ச்சி பாதையில் பிரிக்ஸ்

இந்த சூழலில் பிரிக்ஸ் நாடுகள் தங்களுடைய வர்த்தகத்திற்கு டாலர் அல்லாமல் தங்களுக்கு இடையிலான டிஜிட்டல் கரன்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் ஆலோசனை முக்கியத்துவம் பெற்று இருப்பது, அடுத்த வரும் காலகட்டங்களில் பொருளாதார வீழ்ச்சியை குறைத்து, வணிகம் சார்ந்து பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் பெரும் வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in