மக்காவை நோக்கி ட்ரோன் வந்ததா? : சவுதி - ஹூதி மோதலில் புதிய பரபரப்பு ...

மக்கா அருகே ட்ரோன் இடைமறிக்கப்பட்டதாக சவுதி அரேபியா தகவல்; புனித நகரத்தை குறிவைக்கவில்லை என ஹூதி அமைப்பு விளக்கம் ...
Saudi Arabia Intercepts Suspected Houthi Drone Near Mecca, Security Alert Issued
Saudi Arabia Intercepts Suspected Houthi Drone Near Mecca, Security Alert IssuedGoogle
1 min read

மக்காவில் பாதுகாப்பு பரபரப்பு :

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான முஸ்லிம்களின் புனித நகரமான மக்காவை ஒட்டி நேற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

சவுதி அரேபியாவின் மக்கா, ஜெட்டா மற்றும் தாயிஃப் உள்ளிட்ட நகரங்களில் திடீரென பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பெரும் பதற்றம் நிலவியது.

ட்ரோன் தாக்குதல் முயற்சி?

யேமனில் செயல்பட்டு வரும் ஹூதி அமைப்பு சவுதி அரேபியாவை நோக்கி ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து சவுதி வான் பாதுகாப்பு படைகள் உஷார்படுத்தப்பட்டன.

மக்காவின் தெற்குப் பகுதியில் வந்ததாக கூறப்படும் ட்ரோன் ஒன்று இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மக்காவை குறிவைத்தார்களா?

இந்த சம்பவம் தொடர்பாக உலகம் முழுவதும் அதிகம் எழுந்த கேள்வி இதுதான்.

சவுதி தரப்பு, மக்காவை ஒட்டிய பகுதியில் ட்ரோன் அச்சுறுத்தல் இருந்ததாக கூறியுள்ளது.

ஆனால் ஹூதி அமைப்பு, "மக்காவையோ அல்லது எந்த இஸ்லாமிய புனித தலத்தையோ நாங்கள் குறிவைக்கவில்லை" என்று மறுப்பு தெரிவித்துள்ளது.

தாக்குதலின் உண்மையான இலக்கு என்ன என்பது குறித்து விவாதம் நீடித்து வருகிறது.

யேமன் - சவுதி மோதலின் பின்னணி :

யேமனும் சவுதி அரேபியாவும் அடுத்தடுத்த நாடுகள். கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக யேமனில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

இதில் ஹூதி அமைப்புக்கும், சவுதி ஆதரவு பெற்ற யேமன் அரசுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது.

இதன் காரணமாக சவுதி அரேபியாவின் பல பகுதிகள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் முயற்சிகள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளன.

மத ரீதியான மோதல் அல்ல :

இந்த சம்பவத்தை மத ரீதியாக பார்க்க முடியாது. ஹூதி அமைப்பை சேர்ந்தவர்களும் முஸ்லிம்கள்தான்.

மக்கா மற்றும் மதீனா போன்ற புனித தலங்களுக்கு உலக முஸ்லிம்கள் அளிக்கும் முக்கியத்துவத்தை அவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

எனவே இந்த மோதல் மத அடிப்படையிலானது அல்ல; அரசியல், பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஆதிக்கம் தொடர்பானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

உலக முஸ்லிம்களின் கவனம் :

மக்கா என்பது ஆண்டுதோறும் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ் மற்றும் உம்ரா பயணம் மேற்கொள்ளும் புனித நகரம்.

எனவே மக்காவை ஒட்டிய பகுதியில் ஏதேனும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டாலே அது உலகளவில் பெரிய செய்தியாக மாறுகிறது.

இந்த சம்பவமும் தற்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

==================

logo
Thamizh Alai
www.thamizhalai.in