

எல் நினோ
எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை பகுதிகளில் கடல் நீர் வழக்கத்தை விட அதிகமாக வெப்பமடையும் ஒரு இயற்கையான நிகழ்வு தான்.
சூப்பர் எல் நினோ
உலகளாவிய சராசரி வெப்பநிலையை இது கணிசமாக உயர்த்தும். இம்முறை இது வழக்கமான அளவைக் கடந்து 'சூப்பர் எல் நினோவாக' உருவெடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையங்கள் தெரிவிக்கின்றன.
சூப்பர் எல் நினோ அறிகுறி
பசிபிக் பெருங்கடலில் கடல் மட்டமும், வெப்பநிலையும் |மிக வேகமாக உயர்ந்து வருவதை நாசாவின் Sentinel-6 செயற்கைக்கோள் கண்டறிந்து உறுதிப்படுத்தி இருக்கிறது.
நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் (JPL) வெளியிட்டுள்ள வரைபடத்தில், சராசரியை விட அதிக கடல் மட்டம் கொண்ட பகுதிகள் சிவப்பு நிறத்திலும், சாதாரண பகுதிகள் வெள்ளை நிறத்திலும், குறைந்த கடல் மட்டம் கொண்ட பகுதிகள் நீல நிறத்திலும் குறிக்கப்பட்டுள்ளன
வானிலையில் பெரும் மாற்றம்
இது Super El Nino தொடங்கியதன் அறிகுறி என்கின்றனர் விஞ்ஞானிகள். இதன் காரணமாக உலக அளவில் வானிலை தலைகீழாக மாற வாய்ப்பு உள்ளது.
புதிய உச்சத்தில் வெப்பநிலை
உலகெங்கிலும் வெப்பநிலை புதிய உச்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான வறட்சி மற்றும் காட்டுத் தீ பாதிப்புகள் அதிகரிக்கலாம்.
உணவு உற்பத்தி பாதிக்கும்
தீவிர காலநிலை மாற்றத்தால் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு விலைவாசி உயரக்கூடும். இந்தியாவில் இதன் தாக்கத்தால் பருவமழை குறையும்.
ஏற்கனவே, தென்மேற்கு பருவமழை குறைந்து விட்டது. கேரளா, கர்நாடக, மகாராஷ்டிராவில் மழை தீவிரம் பெறவில்லை. இதனால், விவசாய பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.
பொய்த்துபோன பருவமழை
அணைகள் வறண்டு கிடக்கின்றன. குடிநீர் பற்றாக்குறையும் தலைதூக்கும் அபாயம் உருவாகி இருக்கிறது. இந்தியாவில் வறட்சி அல்லது இயல்பான மழைக்குக் குறைவான மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறுகிறது.
நீடிக்கும் வெப்ப அலைகள்
இந்தியாவில் கோடை காலம் முடிந்து விட்டாலும், ஜூலை இறுதிவரை கடுமையான வெப்ப அலைகள் வீசக்கூடும்.
கனமழை, பெருவெள்ளம்
ஒரு பக்கம் வெப்ப அலைகள் இருந்தாலும், வரலாறு காணாத மழையும், பெரு வெள்ளமும் பல நாடுகளை புரட்டி போட காத்திருக்கிறது. இதனால், ஏற்படும் பாதிப்புகள் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
150 ஆண்டுகளில் இல்லாத வறட்சி
கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிக மோசமான எல் நினோ பாதிப்பாக இது இருக்கும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இதன் தாக்கம் இந்தியாவிலும் ஏற்கனவே எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது, நாட்டின் பல பகுதிகளில் வெயில் அளவு 45 டிகிரி செல்சியஸைத் தொட்டுள்ளது.
=====================