Texas- ல் பரபரப்பு: இந்திய தேசியக் கொடியைக் கிழித்த அமெரிக்கர், வைரலாகும் வீடியோ, இந்தியர்கள் அதிர்ச்சி!

டெக்சாஸில் இந்திய தேசிய மூவர்ணக் கொடியைக் கிழித்து அவமதித்த வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
Sensation in Texas: American Tears Indian National Flag; Video Goes Viral, Indians Shocked!
Sensation in Texas: American Tears Indian National Flag; Video Goes Viral, Indians Shocked!source: x.com
1 min read

Sensation in Texas: American Tears Indian National Flag; Video Goes Viral, Indians Shocked!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபிரிஸ்கோ சிட்டி ஹால் (Frisco City Hall) வளாகத்திற்கு வெளியே, நபர் ஒருவர் இந்திய தேசியக் கொடியைக் கிழித்து அவமதிப்பு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவமதிப்பு

சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களின்படி, இந்தியக் கொடியை அவமதித்த அந்த நபர் டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த 'கிளேட்டன் வாக்கர்' என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வடக்கு டல்லாஸ் பகுதியில் இந்தியர்களின் குடியேற்றம் அதிகரித்து வருவதாகக் கூறி, அதற்கு தனது எதிர்ப்பை பதிவு செய்யும் நோக்கில் அவர் இந்த செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கூச்சலிட்டு உற்சாகப்படுத்திய கும்பல்

வெளியாகியுள்ள வீடியோ காட்சிகளில், கிளேட்டன் வாக்கர் தனது வாயில் சிகரெட்டுடன் இந்திய மூவர்ணக் கொடியை துண்டு துண்டாகக் கிழித்தெறிவது பதிவாகியுள்ளது.

அவர் கொடியைக் கிழிக்கும் போது, அங்கு கூடியிருந்த ஒரு கும்பல் இந்தியாவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், கைகளைத் தட்டி அவருக்கு ஆதரவாக ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தியுள்ளனர்.

எக்ஸ் தளத்தில் வைரலாகும் வீடியோ

இந்த வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. இதுவரை 2.6 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ள இந்த வீடியோ, நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான அதிர்வலைகளை ஏர்படுத்தியுள்ளது.

மேலும் இந்திய தேசியக் கொடியை அவமதித்த அந்த நபரின் செயலுக்கு பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in