உக்ரைனின் புதிய பிரதமர்: யார் இந்த செர்ஹி கோரெட்ஸ்கி? திடீர் அரசியல் மாற்றத்தின் பின்னணி என்ன?

உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்விரைடென்கோ ராஜினாமாவைத் தொடர்ந்து, செர்ஹி கோரெட்ஸ்கி புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Sergiy Koretsky Appointed As New Ukraine Prime Minister
Sergiy Koretsky Appointed As New Ukraine Prime Ministergoogle
1 min read

Sergiy Koretsky Appointed As New Ukraine Prime Minister

ரஷ்யாவுடன் மிகக் கடுமையான போர் சூழல் நிலவி வரும் வேளையில், உக்ரைன் நாட்டின் புதிய பிரதமராக செர்ஹி கோரெட்ஸ்கி (Sergiy Koretsky) நாடாளுமன்ற ஒப்புதலுடன் முறைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உக்ரைன் அரசிற்குள் திடீர் அதிரடி மாற்றங்கள்

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் 4 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது.

இத்தகைய அசாதாரணமான சூழ்நிலையில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிர்வாக நலனைக் கருதில் கொண்டு, வெளியில் அறிவிக்கப்படாத பல்வேறு காரணங்களுக்காக உக்ரைன் அரசுக்குள் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள அதிபர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி அதிரடி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் யூலியா ஸ்விரைடென்கோ (Yulia Svyrydenko) கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜிநாமா செய்தார்.

அவருடன் சேர்ந்து மேலும் சில முக்கிய அமைச்சர்களும் தங்களது பதவிகளைத் துறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யார் இந்த செர்ஹி கோரெட்ஸ்கி?

முன்னாள் பிரதமர் பதவி விலகியதைத் தொடர்ந்து, உக்ரைன் அரசின் அதிகாரப்பூர்வ எண்ணெய் மற்றும் எரிசக்தி நிறுவனமான ‘நாஃப்டோகேஸ்’ (Naftogaz) அமைப்பின் தலைவராக இருந்த 48 வயதான செர்ஹி கோரெட்ஸ்கி நாட்டின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவரது நியமனத்திற்கு உக்ரைன் நாடாளுமன்றம் தனது முழு ஒப்புதலை வழங்கியுள்ளது.

எரிசக்தி சவாலும் பிரதமர் நியமனத்தின் பின்னணியும்

உக்ரைனில் விரைவில் குளிர்காலம் தொடங்கவுள்ள நிலையில், இந்த நியமனம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தடையற்ற எரிசக்தி விநியோகம்

ரஷ்யாவுடனான போர் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் அதே வேளையில், குளிர்காலத்தில் நாட்டு மக்களுக்குத் தேவையான மின்சாரம் மற்றும் எரிசக்தி விநியோகம் எவ்வித தடையுமின்றி கிடைக்கச் செய்வதே புதிய பிரதமர் செர்ஹி கோரெட்ஸ்கி முதன்மை இலக்காகும்.

எரிசக்தித் துறையில் இவருக்கு இருக்கும் அனுபவம் இதற்கு கைக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in