

ஃப்ளைதுபாய் விமானக் கடத்தல்
இந்தியாவை சேர்ந்த விமானியான கேப்டன் ஸ்மித் மச்சார், ஃப்ளைதுபாய் (flydubai) விமான நிறுவனத்தில பணியாற்றி வர்றாரு. இவரு ஒரே நாளில் உலகின் ஹீரோவா கொண்டாடப்பட்டாரு. அதற்கு முக்கிய காரணம் விமான கடத்தல் சதியை முறியடிச்சது தான்.
ஓமன் துணை விமானி சதி
செப்டம்பர் 30ம் தேதி துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 170க்கும் மேற்பட்ட பயணிகளோட, ஃப்ளைதுபாய் விமானம் புறப்பட்டுச்சு.
இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார்
கேப்டனாக ஸ்மித் மச்சாரும், துணை விமானியா ஓமனை சேர்ந்த நபரும், விமானத்தை இயக்கினாங்க.
ஸ்மித் மச்சார் மீது கொலைவெறி தாக்குதல்
நடுவானில் சுமார் 27 ஆயிரம் அடி உயரத்தில விமானம் பறந்து கொண்டிருந்த போது, ஓமனைச் சேர்ந்த துணை விமானி திடீரென கேப்டன் ஸ்மித் மச்சாரை கத்தியால் மற்றும் அவசரக்கால கோடரியால் தாக்கினாரு.
விமானத்தை தரையில் மோதச் சதி
விமானத்தை வேகமாக தரையிறக்கி மோதச் செய்யுற முயற்சியிலேயும் அவர் ஈடுபட்டாரு. விமானம் திடீரென வேகமாக கீழே இறங்க முயன்றதால, பயணிகள் பயத்துல அலறினாங்க.
காயமுற்றாலும், துணிச்சலாக செயல்பட்ட மச்சார்
துணை விமானி தாக்கியதில், கடுமையாக கத்திக் குத்துக் காயங்கள், கோடாரியால் வெட்டியதால் மண்டை ஓட்டுல முறிவு ஏற்பட்டு ரத்தம் கொட்டிய போதிலும்,. துணிச்சலோட செயல்பட்ட கேப்டன் ஸ்மித் மச்சார் தொடர்ந்து போராடி காக்பிட் (Cockpit) கதவைத் திறந்து விட்டாரு.
170 பேரையும் காப்பாற்றினார்
இதனால், சக ஊழியர்களும் பயணிகளும் உள்ளே புகுந்து துணை விமானியை வளைச்சி பிடிச்சாங்க. ஸ்மித் மச்சாரின் இந்த துணிவுதான், விமானம் தரையில மோதாமல் தடுத்தது. 170-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றியது.
உலகமே கொண்டாடிய மச்சார்
இதை பார்த்து, உலகமே ஸ்மித் மச்சாரை ஹீரோவா கொண்டாடியது. துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்மித் மச்சாரை நேரில் சந்தித்து நலம் விசாரிச்சு பாராட்டினாரு.
யுஏஐ அதிபர் நேரில் அழைத்து பாராட்டு
இப்போ உடல் நலம் தேறி இருக்கிற ஸ்மித் மச்சாரை, ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், நேரில் அழைச்சு பாராட்டினாரு. அப்போது ஃப்ளைதுபாய் விமானக் குழுவினரும் உடன் இருந்தாங்க.
யுஏஇ உயரிய விருது வழங்கி கௌரவிப்பு
துபாய் ஆட்சியாளரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் முன்னிலையில் நடந்த சந்திப்பில, கேப்டன் ஸ்மித் மச்சார் மற்றும் அவரது குழுவினருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான 'ஃபர்ஸ்ட் கிளாஸ் ஆர்டர் ஆஃப் சயீத் II' (First Class Order of Zayed II) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த விருதினை துபாய் இளவரசரும், பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் வழங்கி, கேப்டன் ஸ்மித் மச்சாரை வெகுவா பாராட்டினாரு.
ஃப்ளைதுபாய் பயணிச்சவங்களில பெரும்பாலானோர் இஸ்ரேலியர்கள். எனவே, அந்நாட்டு அரசும் சுதந்திர தின விழாவின் போது, உயரிய விருதை ஸ்மித் மச்சாருக்கு வழங்க இருக்கு.
===========================