40 நாடுகளுக்கு இலவச விசா : சுற்றுலாவை மேம்படுத்தும் இலங்கை

Sri Lanka Free Tourist Visa For 40 Countries List : சுற்றுலாவை மேம்படுத்தவும், இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் 40 நாடுகளுக்கு இலவச சுற்றுலா விசா வழங்க இருப்பதாக இலங்கை அரசு அறிவித்து இருக்கிறது.
Sri Lanka Free Tourist Visa For 40 Countries List 2025
Sri Lanka Free Tourist Visa For 40 Countries List 2025
1 min read

பாதிப்பின் பிடியில் இலங்கை :

Sri Lanka Free Tourist Visa For 40 Countries List : இந்தியாவின் அண்டை நாடான இலங்கை, இயற்கை வளங்களையும், சுற்றுலாவை நம்பியே இருக்கிறது. நீண்ட காலமாக நடைபெற்ற உள்நாட்டுப் போர், அந்தநாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து இருக்கிறது. இதன் காரணமாக விலைவாசி கடுமையாக உயர்ந்து, மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க இலங்கை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.

நாடுகளுக்கு அனுமதி இலவச விசா :

இந்தநிலையில், கோழும்புவில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்று பேசிய அந்நாட்டு வெளியுறவு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர், விஜித ஹெராத், “தற்போதைய சூழலில், இந்தியா உட்பட ஏழு நாடுகள் மட்டுமே இலங்கையில் விசா இல்லாமல் நுழைய முடியும். இந்தப் பட்டியலை 40 நாடுகளுக்கு விரிவுபடுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விசா கட்டண விலக்கு அளிக்கப்படுவதால், இலங்கை அரசு ஆண்டுக்கு 66 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் இழப்பை சந்திக்கும். அதேசமயம், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதால் ஏற்படும் மறைமுக பொருளாதார நன்மைகள், இழப்பை விட அதிகமாக இருக்கும்” என்று கூறினார்.

பயன்பெறும் 40 நாடுகள் :

இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, போலந்து, கஜகஸ்தான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாளம், சீனா, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா.

தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, செக் குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இஸ்ரேல், பெலாரஸ், ஈரான், ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க், கொரியா, கத்தார், ஓமன், பஹ்ரைன், நியூசிலாந்து, குவைத், நார்வே, துருக்கியே ஆகிய 40 நாடுகளுக்கு இலவச விசா வழங்க இலங்கை முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே உள்ள இந்தியா, சீனா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 7 நாடுகளும் இந்தப் பட்டியலில் இப்போது சேர்க்கப்பட்டுள்ளன.

=============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in