வெனிசுலாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் : 7.2, 7.5 ஆக பதிவு, நகரங்கள் தரைமட்டம் : 1000க்கும் மேல் பலி, அவசரநிலை பிரகடனம்

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கம் , ரிக்டர் அளவுகோலில் 7.2 , 7.5 ஆக பதிவாகியுள்ளது
Successive earthquakes in Venezuela: Magnitudes of 7.2 and 7.5 recorded.
Successive earthquakes in Venezuela: Magnitudes of 7.2 and 7.5 recorded. google
1 min read

வெனிசுலாவை நிலைகுலைய வைத்த நிலநடுக்கம்

அமெரிக்க நாடான வெனிசுலாவில் மிகப் பெரிய இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டதி அடுத்து நகர் கராகஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் நிலைகுலைந்துள்ளன. 

ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5ஆக பதிவு

மாலை 6 மணி அளவில் ,இந்திய நேரப்படி அதிகாலை 3 மணி, அளவில் ஏற்ப்பட்ட நிலநடுக்கம் 39 விநாடிகள் இடைவெளியில் ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 என இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இந்த அதிர்வுகளால் கரீபியன் தீவு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

10,000க்கும் மேற்ப்பட்டோர் பலி, தரைமட்டமான நகரங்கள்

இந்த இரட்டை நிலநடுக்கத்தால் , வெனிசுலா தலைநகர் கராகஸ் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளும் வணிக வளாகங்களும் சீட்டுக்கட்டுகளைப் போல சரிந்து விழுந்ததால், ஒட்டுமொத்த நகரமும் தூசு மண்டலமாக காட்சி அளிக்கிறது.

வீதிகளில் மக்கள் தஞ்சம்

குறிப்பாக விமான நிலையம் ஒன்றில் நொறுங்கி விழும் காட்சிகளையும், வீதிகளில் மக்கள் அலறியடித்தபடி ஓடியதாகவும், இடிபாடுகளுக்குள் தங்களின் உறவினர்களை தேடி மக்கள் தவிப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவரசநிலை பிரகடனம்

அடுத்தடுத்து ஏற்ப்பட்ட இரட்டை நிலநடுக்கத்தால் வெனிசுலா முழுவதும் கடுமையான பாதிபுகள் ஏற்ப்பட்டுள்ளதால் அங்கு அவசர கால நிலையை இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அறிவித்துள்ளார்

மீட்பு பணிகள் தீவிரம்

தீவிரமான நிலநடுக்க அதிர்வுகளால் மக்கள் வீடுகளுக்குள் செல்ல அச்சமடைந்து வீதிகளிலேயே தஞ்சமடைந்துள்ளனர்.மேலும் இடிபாடுகளோஇல் சிக்கியவர்களை தேடும் பணியில் அந்நாட்டு தீயணைப்பு துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர்

மேலும், தேசிய பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் பணிகளை தீவிரப்படுத்து உள்ளதாக அந்நாட்டு அரசு சார்பில் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது , உயிரிழப்புகல் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் இதுவரை வெளிவராததால் , பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்று தெரிகிறது

பிரதமர் மோடி இரங்கல், உதவிகளை இந்தியா வழங்கும்

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள மோடி குறிப்பிட்டுள்ளதாவது

வெனிசுலாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கங்களால் ஏற்பட்டுள்ள பேரழிவைக் கண்டு ஆழ்ந்த துயரம் கொள்கிறேன். இந்திய மக்களின் சார்பில், வெனிசுலா அரசாங்கத்திற்கும் மக்களுக்கும், குறிப்பாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதோடு, இக்கடினமான சூழலில் பாதிக்கப்பட்ட அனைவருடனும் நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம். சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளதும் , மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெனிசுலாவிற்கு தேவையான உதவிகளை வழங்க தயார் என்றும் தனது ட்ருத் சோஷியல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

logo
Thamizh Alai
www.thamizhalai.in