”30 டிகிரி செல்சியஸ், தகிக்கும் கடல் வெப்பம்”: உச்சம் நோக்கி சூப்பர் எல்நினோ : 2027 ஏப்ரல் வரை நீடிக்கும் என கணிப்பு..!

உலகளவிய அளவில் சூப்பர் எல்நினோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், வெப்பநிலை தொடர்ந்து 30 டிகிரி செல்சியஸ்ஸை கடந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
’Super El Niño' continues to exert a significant global impact, temperatures consistently crossing  30-degree Celsius
'Super El Niño' continues to exert a significant global impact, temperatures consistently crossing 30-degree Celsiussource:thamizhalai,ai generated
1 min read

சூப்பர் எல் நினோ நிகழ்வு

சூப்பர் எல் நினோ நிகழ்வு தொடர்ந்து தீவிரம் பெற்றுவரும் நிலையில், நினோ 3.4 பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை முதன்முறையாக 30 டிகிரி செல்சியஸை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவுகளின்படி, கடந்த 5ம் தேதி கடல் மேற்பரப்பு வெப்பநிலை ஆரம்ப கட்டமாக 30.06°C ஆக பதிவான. 1981ம் ஆண்டு பிறகு இந்த அளவு வெப்பம் உணரப்படுவது இதுவே முதன்முறை.

அதிகரித்த வெப்பநிலை

1991 முதல் 2020 வரையிலான சராசரி வெப்பநிலையுடன் ஒப்பிடும்போது, தற்போது சுமார் 3.41°C அளவுக்கு வெப்பநிலை அதிகரித்துள்ளது.

பொதுவாக அக்டோபர் தொடக்கத்தில் இயல்பான சராசரி வெப்பநிலை 26.6 முதல் 26.7°C வரை மட்டுமே இருக்கும் நிலையில், தற்போது பதிவாகியுள்ள வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளது.

2026ம் ஆண்டின் வெப்பநிலை அளவுகள் 1876, 1982, 1997 மற்றும் 2015 போன்ற முந்தைய ஆண்டுகளின் பதிவுகளைக் காட்டிலும் உயர்ந்து காணப்படுகிறது.

எல் நினோ பொதுவாக உச்சத்தை அடையும் காலத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடல் வெப்பநிலையும் தொடர்ந்து அதிகரித்து கவலையை அளிக்கிறது.

வலுவடையும் சூப்பர் எல்நினோ

தொடர்ந்து வெப்பம் கிழக்கு நோக்கி நகர்தல் உள்ளிட்ட காரணங்களால் கடல் மற்றும் வளிமண்டலத்திற்கு இடையேயான எல் நினோ இணைப்பு வலுவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு வரை சூப்பர் எல்நினோ

இந்நிலையில், சூப்பர் எல் நினோ இன்னும் உச்சத்தை அடையவில்லை என கூறப்படுகிறது. 2026 டிசம்பர் மாதம் இதன் உச்சகட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தீவிரமான சூப்பர் எல் நினோ நிலைமைகள் 2027 ஏப்ரல் மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in