”தமிழர் சிவராசா அனோஜனின் மரண தண்டனை ரத்து” : இலங்கை, இந்தியா முன்னெடுப்புகள் : சவுதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..!

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனின் தண்டனையை ரத்து செய்துள்ளது அந்நாட்டு உச்சநீதிமன்றம்
Supreme Court of Saudi Arabia has overturned the death sentence imposed on Sivarasa Anojan
Supreme Court of Saudi Arabia has overturned the death sentence imposed on Sivarasa Anojansource:thamizhalai,ai generated
1 min read

இலங்கை தமிழர் சிவராசா அனோஜன்

இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை செளதி அரேபிய உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக இலங்கை வெளியுறவு துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உறுதி செய்துள்ளார்.

இலங்கை அரசு, இந்திய அரசு தொடர்ந்து மேற்கொண்ட தூதரக மற்றும் சட்டரீதியான முயற்சிகளின் விளைவாக இந்த தீர்ப்பானது வெளியாகி இருக்கிறது.

வேலைதேடி சவுதி சென்ற அனோஜன்

இலங்கை கல்முனையை சேர்ந்த 27 வயதான கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன், வேலைக்காக 2025 சவுதி அரேபியாவுக்கு சென்றார்.

சில மாதங்களுக்கு முன்பு இலங்கை கதிர்காமத்தில் உள்ள முருகன் ஆலயத்திற்கு பாதயாத்திரை சென்றவர்களோடு நாய் ஒன்றும் பயணித்தது

கல்முனை பகுதியில் அந்த நாயின் மீது இஸ்லாமிய இளைஞர் ஒருவர் தாக்குதல் நடத்தினார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, பேசுபொருளானது.

கைது செய்யப்பட்ட அந்த இளைஞர், பின்னர் மன்னிப்பு கோரியதால், விடுவிக்கப்பட்டார்.

நபிகள் குறித்து அனோஜன் கருத்து

தனது ஊரான கல்முனை பகுதியில் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஜூலை 27ம் தேதி, ஃபேஸ்புக்கில் அனோஜன் நபிகள் நாயகம் குறித்து பதிவிட்டு இருந்தார்.

அனோஜன் கைது

இது மதநிந்தனையாக சவுதி மக்கள் கருதினர். அனோஜனுக்கு எதிராக குரல்களும் எழும்ப, சவுதி அரேபியக் காவல்துறையினர் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை

முதலில், அல்-அஹ்சா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அனோஜனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 30 லட்சம் செளதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது.

மரண தண்டனையாக மாற்றம்

எனினும், இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை அரசிடம் முறையீடு

மரண தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து சிவராசா அனோஜனின் குடும்பத்தினர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து தங்களது மகனை மீட்க கோரிக்கை வைத்தனர்

அனோஜனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை ரத்துசெய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தான் எடுப்பதாக ஜனாதிபதியும் உறுதி அளித்தார்.

சவுதி நீதிமன்றத்தில் மேல்முறையீடு

இதையடுத்து சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகம் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்திய அரசும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது. தமிழகத்தில் இருந்தும் அனோஜனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கப்பட்டது.

மரண தண்டனை ரத்து

சவுதி உச்ச நீதிமன்றத்தில் மேற்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், அனோஜனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

ஆனால், அனோஜன் விடுவிக்கப்படுவாரா என்ற தகவல் வெளியாகவில்லை. கீழமை நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின்படி, அவர் 5 ஆண்டுகள் சிறையில் இருப்பாரா என்பது பற்றியும் தகவல் வெளியாகவில்லை.

=====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in