

பெரிய சக்தியாக வளர்ந்த தைவான்:
சீனாவின் தென்கிழக்கு கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள தீவு நாடான தைவான், உலகின் முன்னணி தொழில்நுட்ப மற்றும் அரைக்கடத்தி உற்பத்தி மையங்களில் ஒன்றாக திகழ்கிறது.
சுயசார்பு பொருளாதாரம்
1949 ஆம் ஆண்டு சீன உள்நாட்டு போருக்குப் பிறகு தனித்த நிர்வாக அமைப்புடன் செயல்பட்டு வரும் தைவான், கடந்த சில தசாப்தங்களில் வேளாண்மை சார்ந்த பொருளாதாரத்திலிருந்து உயர் தொழில்நுட்ப பொருளாதாரமாக மாறியுள்ளது.
ஏஐ துறையில் அசுர வளர்ச்சி
குறிப்பாக சிப் உற்பத்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைகளில் பெற்றுள்ள முன்னேற்றம், தைவானை உலக பொருளாதாரத்தில் முக்கிய இடத்தைப் பெறச் செய்துள்ளது.
பொருளாதார வளர்ச்சியின் பலனை மக்களுடன் பகிரும் அரசு :
கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான தேவை வேகமாக அதிகரித்துள்ளது
இதன் காரணமாக தைவானின் அரைக்கடத்தி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் கணிசமான வருவாய் ஈட்டியுள்ளன.
ஒருவருக்கு ரூ.30,000 வரை கிடைக்கும் :
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தகுதியுள்ள குடிமகனுக்கும் NT$10,000 வழங்கப்பட உள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.28,000 முதல் ரூ.30,000 வரை ஆகும்.
குடும்பங்களின் செலவுச் சுமையை குறைப்பதோடு, உள்நாட்டு நுகர்வையும் அதிகரிக்க இந்த திட்டம் உதவும் என்று தைவான் அரசு நம்புகிறது.
சட்டமன்ற ஒப்புதலுக்காக காத்திருக்கும் திட்டம் :
இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன் தைவான் சட்டமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஒப்புதல் கிடைத்தால், 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அல்லது சீனப் புத்தாண்டுக்கு முன்னதாக இந்த தொகை மக்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த நடவடிக்கை :
செயற்கை நுண்ணறிவு மற்றும் சிப் உற்பத்தி துறைகளில் தைவான் பெற்றுள்ள வளர்ச்சி, அந்த நாட்டின் பொருளாதாரத்தை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
பொருளாதார வளர்ச்சியின் பலனை நேரடியாக மக்களுடன் பகிரும் இந்த முயற்சி, உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
==============