"Dark Prince" தாரிக் ரஹ்மான் : 4 வயதில் சிறை, 60 வயதில் பிரதமர்

வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்க உள்ளார். அவரது அரசியல் வாழ்க்கை குறித்து காணலாம்.
Tariq Rahman is set to take oath as the new Prime Minister of Bangladesh today. Here's a look at his political career.
Tariq Rahman is set to take oath as the new Prime Minister of Bangladesh today. Here's a look at his political career.
2 min read

அப்பா அதிபர், தாயார் பிரதமர்

வங்கதேச தேசியக் கட்சியின் தலைவரான தாரிக் ரஹ்மான், முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மான் மற்றும் முன்னாள் பிரதமர் பேகம் கலீதா ஜியா ஆகியோரின் மூத்த மகன்.

வங்கதேசம் பாகிஸ்தானின் ஒரு அங்கமாக இருந்தபோது, கிழக்கு பாகிஸ்தானில் 1965ம் ஆண்டு பிறந்தவர் இவர்.

நான்கு வயதில் சிறைவாசம்

தாரிக்கிற்கு 4 வயது இருக்கும்போது, 1971ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அவரது தந்தை ஜியாவுர் ரஹ்மான் வங்கதேச விடுதலை போராட்டத்தில் பங்கேற்றதால், குடும்பத்தை கைது செய்தது பாகிஸ்தான் ராணுவம்.

விளையாட்டு வயதில் சிறை

பொம்மைகளுடன் விளையாட வேண்டிய வயதில் பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிகளுக்கு நடுவே சிறையில் இருந்தார்

தாரிக் ரஹ்மான். பின்னர் வங்கதேசம், விடுதலை பெற்று ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபூர் ரஹ்மான் அதிபராக பதவியேற்றார்.

புரட்சியாளரின் மகன் தாரிக்

1975-ஆம் ஆண்டு நடைபெற்ற ராணுவ புரட்சிக்கு பின்னர் தாரிக்கின் தந்தை ஜியாவுர் ரஹ்மான் முக்கியத்துவம் பெற்றார். முதலில் ராணுவ ரீதியாக ஆட்சி நடத்திய ஜியாவுர், 1977 ஆண்டு அதிகாரபூர்வமாக அதிபராகப் பொறுப்பேற்றார். பின்னர் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தாரிக்கின் அரசியல் பயணம்

1988ல் தந்தை ஜியாவுர் ரஹ்மானின் சொந்த ஊரான போக்ராவில் சாதாரண உறுப்பினராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 22. நாட்டின் அதிபரின் மகன் ஒரு சிறிய கிராமத்து கிளைக்குச் சென்று உறுப்பினர் அட்டை வாங்கியது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

தாயாரின் வெற்றியில் தாரிக் பங்கு

1991ல் அவரது தாயார் கலீதா ஜியா போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் தேர்தல் வியூகங்களை வகுத்தது தாரிக் தான். அந்தத் தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி அமோக வெற்றி பெற்றது.

பிரதமரானார் கலிதா ஜியா. இந்த வெற்றியை தொடர்ந்து தாரிக்கை கொண்டாட தொடங்கியது வங்கதேச தேசியக் கட்சி.

சக்திமிக்க தலைவரான தாரிக்

2001ல் வங்கதேச தேசியவாத கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, தாரிக் ரஹ்மான் ஒரு அதிகாரப்பூர்வமற்ற 'சூப்பர் பவர்' ஆக உருவெடுத்தார். டாக்காவில் இருந்த அவரது அலுவலகமான 'ஹாவா பவன்' இரண்டாவது நாடாளுமன்றமாக செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன...

நிழல் இளவரசன் தாரிக்

அரசியலில் அவர் மிக உயரத்தில் இருந்தபோது, அவருக்கு நிழல் இளவரசன் எனப்படும் 'டார்க் பிரின்ஸ்' என்ற பெயரும் வந்தது. ஊழல் புகார்கள் ஷேக் ஹசீனா அரசை ஆட்டிப்ப டைக்க 2007ல் கைது செய்யப்பட்ட தாரிக் பின்னர், லண்டனுக்கு குடிபெயர்ந்தார்.

லண்டனில் இருந்தவாறே அரசியல்

அதன்பிறகு 17 ஆண்டுகள் லண்டனில் இருந்தவாறே வங்கதேச அரசியலை ஆட்டிப் படைத்தார் தாரிக். வங்கதேச தேசியக் கட்சியின் துணைத் தலைவர், கலிதா ஜியா சிறைக்கு சென்ற பிறகு செயல் தலைவர் என தாரிக் பணி தொடர்ந்தது.

ஜூம், ஸ்கைப் வழியே அரசியல்

வங்கதேசத்தின் ஒவ்வொரு தெருவில் உள்ள தொண்டரையும் 'ஜூம்' மற்றும் 'ஸ்கைப்' வழியாகக் கட்டுப்படுத்தியதே தாரிக் அரசியலின் மிகப்பெரிய மேஜிக்..

வங்கதேசத்தில் மாணவர் புரட்சி

2024ம் ஆண்டு வங்கதேசத்தில் மாணவர் புரட்சி வெடிக்க பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார். அதன்பிறகு தாரிக் ரஹ்மான் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் அவர் கடந்த டிசம்பர் மாதம் நாடு திரும்பிய தாரிக் ரஹ்மானுக்கு, . பல லட்சம் தொண்டர்கள் விமான நிலையத்தை திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

’I Have a plan’ தாரிக் ரஹ்மான்

மார்ட்டின் லூதர் கிங்கின் புகழ்பெற்ற ’I Have a Dream’ உரையை போன்று ’I Have a plan’ என முழக்கமிட்டார் தாரிக் ரஹ்மான். பின்னர் அவரது தாயார் கலிதா ஜியா காலமானார்.

வரலாற்று வெற்றி

இரண்டே மாதங்களில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி இருக்கிறார் தாரிக் ரஹ்மான். ஆம் அவரது வங்கதேச தேசியக் கட்சி 299 தொகுதிகளில் 212 தொகுதிகளை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

பிரதமராகிறார் தாரிக் ரஹ்மான்

இதையடுத்து, வங்கதேச பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்று பொறுப்பேற்கிறார். இதன்மூலம் இந்தியா - வங்கதேச உறவு மீண்டும் வலுப்பெறும் என்று கூறப்படுகிறது.

=======================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in