தாரிக் ரஹ்மான் பதவியேற்பு: மோடிக்கு அழைப்பு, ஓம் பிர்லா பங்கேற்பு

PM Modi invited Tarique Rahman Bangladesh : வங்கதேச பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்க உள்ள நிலையில், வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Tarique Rahman sworn in as Prime Minister of Bangladesh, PM Narendra Modi wishes has beed invited to attend swearing-in ceremony
Tarique Rahman sworn in as Prime Minister of Bangladesh, PM Narendra Modi wishes has beed invited to attend swearing-in ceremonySource : Google
1 min read

வங்கதேச பிரதமாராகும் தாரிக் ரஹ்மான்

PM Modi invite to attend Tarique Rahman’s swearing-in ceremony of Bangladesh PM : பிஎன்பி கட்​சி​யின் தலை​வர் தாரிக் ரஹ்​மான் நாளை (பிப்​ர​வரி 17-ம் தேதி) வங்​கதேச பிரதம​ராக பதவி​யேற்கிறார். வங்​கதேசத்​தில் சமீபத்​தில் நடை​பெற்ற பொதுத்​ தேர்​தலில் மறைந்த வங்​கதேச பிரதமர் கலிதா ஜியா​வின் மகன் தாரிக் ரஹ்மான் தலை​மையி​லான பிஎன்பி கூட்​டணி அதிக இடங்களைக் கைப்​பற்​றியது.

300 இடங்​களைக் கொண்ட வங்கதேச நாடாளு​மன்​றத்​தில், 200-க்​கும் மேற்​பட்ட இடங்​களை பிஎன்பி கூட்​டணி கைப்​பற்றி அறு​திப் பெரும்​பான்​மை​யுடன் வெற்றி பெற்​றது.

பதவியேற்பு விழாவுக்கு பிரதமருக்கு அழைப்பு

இதன் ​மூலம் சுமார் 17 ஆண்​டு​களுக்​குப் பின்​னர் வங்​கதேசத்​தில் பிஎன்பி ஆட்சி அமைய உள்​ளது. வங்​கதேச பிரதம​ராக தாரிக் ரஹ்மான் நாளை(பிப்​ர​வரி 17) பதவி​யேற்க உள்​ளார்.

இந்​நிலை​யில், பதவி​யேற்பு விழாவுக்கு வருகை தரு​மாறு பிரதமர் மோடிக்​கு, வங்​கதேசம் நேற்று அழைப்பு விடுத்​துள்​ளது. எனினும், வரும் 17-ம் தேதி பிரதமர் மோடி மும்​பை​யில் பிரான்ஸ் அதிபர் இம்​மானுவேல் மேக்​ரனைச் சந்​தித்து பேச்​சு​வார்த்தை நடத்த உள்​ளார்.

இதனைத் தொடர்ந்து டெல்​லி​யில் நடை​பெற உள்ள செயற்கை நுண்​ணறிவு தொடர்​பான உச்சி மாநாட்​டுக்கு அவர் தலைமை தாங்க உள்​ளார். இதனால், பிரதமருக்​குப் பதிலாக பதவி​யேற்பு விழாவுக்கு மக்​கள​வைத் தலை​வர் ஓம் பிர்லா, மத்​திய வெளி​யுறவுத் ​துறை செயலர் விக்​ரம் மிஸ்ரி ஆகியோர் செல்​ல​வுள்​ளனர்.

முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் அழைப்பு

முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா​வின் பதவி​யிழப்​புக்​குப் பிறகு இந்​தியா - வங்​கதேசம் இடையே​யான உறவில் பின்​னடைவு ஏற்பட்டுள்ள நிலை​யில், இந்த அழைப்பு மிக​வும் முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாகப் பார்க்​கப்​படு​கிறது.

இந்த பதவி​யேற்பு விழாவுக்கு வரு​மாறு பாகிஸ்​தான் உள்​ளிட்ட சார்க் நாடு​களின் தலை​வர்​கள், சீனா, மலேசி​யா போன்ற பிற நட்பு நாடு​களின் தலை​வர்​கள் ஆகியோ​ருக்​கும் அழைப்பு விடுக்​க வங்​கதேசம்​ திட்டமிட்டுள்ளதாக தெரியும் நிலையில், வங்கதேச வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்த உடனே, பதவியேற்பு விழா வருகைக்கு அழைப்பு வந்துள்ளது,

இரு நாட்டின் வளர்ச்சியின் அடித்தளமாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in