அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிய இந்தியா, சீனா: மஸ்க் பகிர்ந்த தகவல்!

Tesla CEO Elon Musk : உலகளாவிய உள்நாட்டு உற்பத்தியில் டாப் 10 நாடுகளின் பங்குகள் குறித்த புள்ளிவிவரத்தை தொழிலதிபர் எலான் மஸ்க், வெளியிட்டுள்ளார்.
Tesla CEO Elon Musk has released statistics Report on contributions of top 10 countries to global GDP China overtake America News in Tamil
Tesla CEO Elon Musk has released statistics Report on contributions of top 10 countries to global GDP China overtake America News in TamilSource : Google
1 min read

பதவியை ராஜினாமா செய்த எலான் மஸ்க்

Tesla CEO Elon Musk : உலக பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவர், 'டெஸ்லா' மற்றும், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவன அதிபர் எலான் மஸ்க். 'எக்ஸ்' சமூக வலை தளத்தையும் சில ஆண்டுகளுக்கு முன் இவர் கையகப்படுத்தினார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பராக அறியப்பட்ட இவர், அமெரிக்க அரசின் செலவுகளை குறைக்க உருவாக்கப்பட்ட சிறந்த நிர்வாகத்துக்கான துறையின் தலைவராக சில மாதங்கள் பணியாற்றினார்.

பின் அமைச்சர்கள் உடனான கருத்து வேறு பாட்டால் அப்பதவியை ராஜினாமா செய்தார்.

உள்நாட்டு உற்பத்தி முண்ணனி நாடுகளை பகிர்ந்த டிரம்ப்

பின்னர், இதைத்தொடர்ந்து மாபெரும் தனிநிறுவன சக்தியாக உருவெடுத்த டிரம்ப், உலகின் அசைக்க முடியாத தொழிலளிதிபர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

இதைத்தொடர்ந்து, அமெரிக்க நிர்வாகத்தை அவ்வப்போது விமர்சித்தும் வருகிறார்.

இந்நிலையில், தன் சமூக வலைதள பக்கத்தில் உலகளாவிய உள்நாட்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகள் பட்டியலை அவர் பகிர்ந்து உள்ளார்.

ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட அப்பட்டியலில் 26.6 சதவீத ஜி.டி.பி.,யுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.

17 சதவீத ஜி.டி.பி.,யுடன் இந்தியா இரண்டாம் இடத்திலும், 9.9 சதவீத ஜி.டி.பி.,யுடன் அமெரிக்கா மூன்றாம் இடத்திலும் உள்ளன.

மேலும் இப்பட்டியலில் இந்தோனேஷியா, துருக்கி, நைஜீரியா, பிரேசில், வியட்நாம், சவுதி அரேபியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

இது குறித்து எலான் மஸ்க், 'உலக பொருளாதார பலம் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா - சீனா நோக்கி மாறுகிறது' என்று கருத்தை பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in