
நீடிக்கும் எல்லைப் பிரச்சினை :
Thailand vs Cambodia War Update : அண்டை நாடுகளான தாய்லாந்து - கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. தாய்லாந்தின் சுரின் மாகாண எல்லையில் உள்ள தா மியூன் தோம் எனும் சிவன் கோவிலை(Thailand Cambodia Sivan Temple) மையமாக வைத்து நிலவி வந்த எல்லைப் பிரச்சினை தற்போது சண்டையில் வந்து முடிந்து இருக்கிறது.
சிவன் கோவிலால் பிரச்சினை :
இந்தக் கோயில், தங்கள் நாட்டுக்குச் சொந்தமானது என கம்போடியா தொடர்ந்து முரண்டு பிடிக்கிறது. ஆனால் இந்தக் கோவில் தங்கள் நாட்டிற்கே உரியது என்று தாய்லாந்தும் உரிமை கோரி வருகிறது. இதன் காரணமாக இருநாட்டு ராணுவத்தினரும் மோதலில்(Thailand vs Cambodia Military Clash) ஈடுபட்டு வருகின்றனர். 3வது நாளாக இந்தச் சண்டை நீடிக்கிறது. இந்த மோதல் போரில் கொண்டு போய் விடுமோ என்ற அச்சமும் எழுந்து இருக்கிறது.
அகதிகளாக வெளியேறும் மக்கள் :
ராணுவத்தினர் நடத்தி வரும் சண்டை காரணமாக, தாய்லாந்தின் எல்லையோரத்தில் வசிக்கும் 1,38,000 பேர் தங்கள் பகுதியில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். இவர்களில், பலர் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ராணுவ மோதலில் 15 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.
கம்போடியா மீது தாய்லாந்து குற்றச்சாட்டு :
ராணுவ மோதலுக்கு கம்போடியாதான் காரணம் என குற்றம் சாட்டியுள்ள தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சாயாசாய், தாக்குதலை நிறுத்தா விட்டால், போரை சந்திக்க வேண்டி இருக்கும் என்று எச்சரித்துள்ளார். “நாங்கள் அண்டை நாடுகள் என்பதால் சமரசம் செய்ய முயற்சித்தோம். அதேநேரத்தில், அவசர காலங்களில் உடனடியாக செயல்பட எங்கள் நாட்டு ராணுவத்துக்கு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம்” என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க : பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிப்போம் : குரல் எழுப்பும் பிரான்ஸ்
அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தல் :
இரு நாடுகளும் மோதலை கைவிட்டு அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று, அமெரிக்கா, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகளும் ஐநா அமைப்பும் கோரி வருகின்றன. இதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
====