இணையத்தை கலக்கும் 'மெலோடி' : 10 கோடி பார்வையாளர்களைக் கடந்த மோடி - மெலோனி வீடியோ!

பார்லே நிறுவனத்தின் 'மெலோடி' சாக்கலேட் பாக்கெட்டை பிரதமர் மோடி இத்தாலி பிரதமர் மெலோனிக்கு அன்பளிப்பாக அளித்தார்.
Modi  presented a packet of Parle's 'Melody' chocolates as a gift to Italian Prime Minister Meloni.|the world
Modi presented a packet of Parle's 'Melody' chocolates as a gift to Italian Prime Minister Meloni.|the worldsource:google
1 min read

டிஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஐந்து நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரகம், ஸ்வீடன் மற்றும் நார்வே ஆகிய நாடுகளைத் தொடர்ந்து அவர் இத்தாலி நாட்டிற்கு சென்றார்.

இத்தாலியின் தலைநகரான ரோம் நகருக்கு வருகை தந்த பிரதமருக்கு அங்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இருதரப்பு பேச்சுவார்த்தையும் சுவாரசிய பரிசும்

இந்தப் பயணத்தின் போது, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியைப் பிரதமர் மோடி நேரில் சந்தித்துப் பேசினார்.

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பரஸ்பர ஒத்துழைப்பு, இருதரப்பு வணிக உறவுகள் மற்றும் உலகளாவிய நட்புறவை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இத்தாலி பிரதமருக்கு மெலோடி அன்பளிப்பு

அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, பிரதமர் மோடி இத்தாலி பிரதமருக்கு ஒரு சுவாரசியமான பரிசை வழங்கினார்.

இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற பார்லே நிறுவனத்தின் 'மெலோடி' (Melody) சாக்கலேட் பாக்கெட்டை அவர் இத்தாலி பிரதமர் மெலோனிக்கு அன்பளிப்பாக அளித்தார்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையவாசிகள் ஏற்கனவே பிரதமர் மோடி மற்றும் இத்தாலி பிரதமர் மெலோனி ஆகிய இருவரின் பெயர்களையும் இணைத்து 'மெலோடி' (Melodi) என்று சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

இந்தச் சூழலில், அதே பெயரைக் கொண்ட சாக்கலேட்டை பிரதமர் மோடி பரிசளித்தது பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நெகிழ்ச்சியான தருணத்தை இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.

அதில், "இந்தியப் பிரதமர் எனக்கு மிகவும் சுவையான மெலோடி சாக்கலேட்டைப் பரிசாகக் கொண்டு வந்துள்ளார்" எனக் கூறியுள்ளார்.

கோடிகளைக் கடந்த பார்வைகள்

இந்த சுவாரசியமான வீடியோ எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியாகி காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் தளத்தில் மட்டும் 14 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. அதேபோல், எக்ஸ் பக்கத்தில் 74 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவைக் கண்டு ரசித்துள்ளனர்.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in