உலகின் முதல் கடல் காற்றாலை நிறுவப்பட்டது : சீனா அசத்தல்!

'World's First' 20 MW Wind Turbine Installed Offshore in China : 20 மெகாவாட் திறன்கொண்ட உலகின் முதல் கடல் காற்றாலை உற்பத்தியை தொடங்கியது சீனா.
The world's first offshore wind farm has been established in China
The world's first offshore wind farm has been established in ChinaSource : google
2 min read

'World's First' 20 MW Wind Turbine Installed Offshore in China : சீனா முதல் 20 மெகாவாட் திறன்கொண்ட கடல் காற்றாலை உற்பத்தியை தொடங்கி, உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றுள்ளது.

கடல் காற்றாலை நிறுவல்

புஜியான் மாகாணத்தின் கடற்கரையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் 40 மீட்டருக்கும் அதிகமான ஆழமுள்ள கடலில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த காற்றலையின் மையப்பகுதியின் மொத்த உயரம் 174 மீட்டர் ஆகும் . கிட்டத்தட்ட 58 அடுக்குமாடி கட்டிடத்திற்கு சமமாகும். காற்றாலை இறக்கைகளின் நீளம் 300 மீட்டர் ஆகும்.

ஆண்டுக்கு 80 மில்லியன் கிலோவாட் மின்சாரம்

இந்த காற்றாலையின் சுழற்சி பரப்பானது பத்து கால்பந்தாட்ட மைதானத்திற்கு இணையானது என கூறுகின்றனர்.

இந்த காற்றலையில் ஆண்டுக்கு 80 மில்லியன் கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

44,000 வீடுகளுக்கு மின்சாரம்

இதனால் ஆண்டிற்கு நாற்பத்து நான்காயிரம் வீடுகளின் மின்சாரத் தேவையானது பூர்த்தி செய்ய முடியும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் இந்த திட்டமானது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டில் சீனாவின் மிகப்பெரிய சாதனை மற்றும் முக்கிய மைல்கல் என்று சீன அரசு கூறியுள்ளது.

கடல் காற்றாலைக்கு முன்னால்

உலகின் முதல் காற்றாலைக்கு முன்னால் சீனா இதேபோல் காற்றாலையை வானத்தில் பறக்கவிட்டு சாதனை படைத்தது.

சீனாவின் பெய்ஜிங் லினி யுஞ்வான் நிறுவனமானது, உலகின் மிக உயரமான மிதக்கும் காற்றாலைக்கான சோதனையை இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நிகழ்த்தியது.

30 நிமிட சோதனையில்

இந்த சோதனையின் போது காற்றாலையானது தரைமட்டத்திலிருந்து 6,500 அடி உயரத்திற்கு பறக்கவிடப்பட்டது. 30 நிமிட சோதனையில் 385 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரமானது உள்ளூர் மின் தொகுப்புடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.

ஸ்காட்லாந்தில் முதலீடு

சீனா டர்பைன் உற்பத்தியில் உலக அளவில் பெயர்பெற்றது. அதனால் இந்த மிதக்கும் காற்றாலை உலகளவில் பேசப்பட்ட நிலையில், மிதக்கும் காற்றாலை வெற்றியைத் தொடர்ந்து சீனா ஸ்காட்லாந்தின் இங்கிலாந்தில் 1.5 பில்லியன் மதிப்புள்ள மிகப்பெரிய காற்றாலை உற்பத்தி நிலையம் கட்ட திட்டமிடுவதாக அறிவித்திருந்தது.

2028-ல் முதல் உற்பத்தி

இந்த மிதக்கும் காற்றாலையை செயல்முறை படுத்தினால் கிட்டத்தட்ட 1,500 வேலைகளை உருவாக்கும் என்றும் 2028 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முதல் உற்பத்தி நடைபெறும் என்றும் மிங்யாங் என்ற சீன அதிகாரி கூறியிருந்தார்.

மிதக்கும் காற்றாலையைத் தொடர்ந்து கடல் காற்றாலை

மிதக்கும் காற்றாலை சோதனை வெற்றிபெற்ற நிலையில், தற்போது கடல் காற்றாலையும் வெற்றி பெற்றுள்ளதால் சீனா வெற்றிக்களிப்பில் உள்ளது.

44,000 வீடுகளுக்கு மின்சாரம்

ஏனென்றால் கடல் காற்றாலை மின் உற்பத்தியின் மூலமாக ஆண்டுக்கு 44,000 குடும்பங்களின் மின்சார தேவையை நிறைவேற்ற முடியும்.

இதன் மூலம் சீன அரசு மிதக்கும் காற்றாலை, உலகின் முதல் காற்றாலை என உலக நாடுகளின் பார்வையை தன் பக்கம் ஈர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in