

டைட்டானிக் சொகுசு கப்பல்
Titanic Ship Gold Watch Sold Out At Auction : இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவுக்கு 1912ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி தன்னுடைய முதல் பயணத்தை ஆயிரக்கணக்கான பயணிகளுடன் தொடங்கியது சொகுசுக் கப்பல் டைட்டானிக். ஆனால், பயணத்தை ஆரம்பித்த அடுத்த சில தினங்களிலேயே வட அட்லாண்டிக் கடல் பகுதியில் பனிப் பாறையில் மோதி கடலில் மூழ்கியது டைட்டானிக். இதில் 1500 க்கும் மேற்பட்ட பயணிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
கோடிகளை குவித்த டைட்டானிக் படம்
டைட்டானிக் கப்பலின் இந்த சம்பவத்தை மையப்படுத்தியே இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக் படம் வெளியிட்டார். உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற இந்தப் படம் ஆஸ்கர் விருதுகளையும் அள்ளியது. திரைப்படம் வெளி வந்தபிறகு, டைட்டானிக் கப்பல் நினைவு சின்னமாகவே கருதப்பட்டு வருகிறது. எனவேதான், அந்தக் கப்பலில் பயணித்தவர்களின் உடைமைகளும் அதிக மதிப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன
தொழிலதிபரின் தங்க கடிகாரம்
டைட்டானிக் கப்பலில் பயணித்த போது, கடலில் மூழ்கி இறந்தவர்களுள் ஒருவர்தான் இசிடோர் ஸ்ட்ராஸ்(Isidor Straus Titanic Watch Sold). இவர் ஒரு தொழிலதிபர் ஆவார்.. இவர் கட்டியிருந்த தங்க கடிகாரம் ஏற்கனவே மீட்கப்பட்ட நிலையில், அது தற்போது ஏலத்தில் விடப்பட்டது.
ரூ.20 கோடிக்கு ஏலம் :
தொழிலதிபரான இசிடோர் ஸ்ட்ராஸ் கட்டியிருந்த 18 கேரட் தங்கக் கடிகாரம் இங்கிலாந்தின் வில்ட்ஷயர் நகரில் ஏலத்தில் விடப்பட்டது.. இந்த கடிகாரம், 1.78 மில்லியன் பவுண்டுகளுக்கு அதாவது ரூ.20.7 கோடிக்கு விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
அதிக விலைக்கு போன கடிகாரம்
டைட்டானிக் கப்பல் தொடர்பான நினைவுப் பொருட்களில் அதிகபட்சமாக விற்கப்பட்ட ஏலத்தொகை இதுவாகும். இதன்மூலம் டைட்டானிக் தொடர்பான மொத்த ஏலத்தொகை ரூ.35 கோடியை தாண்டியதாக சம்பந்தப்பட்ட ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கடிகாரத்தின் மீது "IS" என்று அவர் பெயரின் இனிஷியல் பொறிக்கப்பட்டிருக்கிறது.
கப்பல் மூழ்கியபோது நின்ற கடிகாரம்
அதுமட்டுமல்ல, டைட்டானிக் கடலில் மூழ்கிய நேரமான 02:20 AM என்றே அந்த கடிகாரத்திலும் நேரம் இருப்பதாக கூறப்படுகிறது.. அதாவது கப்பல் விபத்துக்குள்ளான நேரத்திலேயே, இசிடோர் ஸ்ட்ராஸின்(Isidor Straus Gold Watch Status in Tamil) இந்த கடிகாரமும் நின்றுவிட்டதாம். அதனால்தான் இந்த அளவுக்கு ஏலத்தொகை விலை போனதாக சொல்கிறார்கள். இந்த கடிகாரம் 43வது பிறந்த நாளுக்கு இசிடோருக்கு பரிசாக கிடைத்ததாம்.
கணவருடன் உயிர்நீத்த மனைவி
கப்பல் விபத்துக்குள்ளானதுமே, அவரது மனைவி தப்பிக்க உயிர்காக்கும் படகு தரப்பட்டது. ஆனால், கணவரை விட்டு பிரிய மாட்டேன் என்று சொல்லி, இசிடோர் ஸ்ட்ராஸுடன் அவரும் கடலில் மூழ்கி இறந்துவிட்டார். இந்த உணர்ச்சிமிகுந்த சம்பவம் டைட்டானிக் படத்திலும் காட்சியாக வைக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.
===============