

டிரம்பின் குடியரசு கட்சி
அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள் அனைவரும் எதிர்பார்த்தபடியே வந்திருக்கிறது. அதிபர் டிரம்ப் தலைமையிலான ஆளுங்கட்சியான குடியரசு கட்சி படுதோல்வியை சந்தித்து இருக்கிறது.
பெரும்பான்மையை இழந்த குடியரசு கட்சி
2024 அதிபர் தேர்தலின் போது, நாடாளுமன்ற இரு அவைகளிலும் டிரம்ப் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தது. ஆனால், இடைத்தேர்தலில் இரண்டு அவைகளிலும் தனது பெரும்பான்மையை பறிகொடுத்து நிற்கிறது குடியரசு கட்சி.
ஜனநாயக கட்சி அமோக வெற்றி
பல மாகாணங்களில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் வாகை சூடி இருக்கிறார்கள். பல மாகாணவங்களில் குடியரசு கட்சியின் கோட்டையானது தகர்க்கப்பட்டு இருக்கிறது. இங்கு ஜனநாயக கட்சியின் கொடி பறக்கிறது.
டிரம்பின் தான்தோன்றித் தனமான செயல்பாடு
இதற்கு சொல்லப்படும் முதல் காரணம் 2024ல் ஆட்சிக்கு வந்ததும் அதிபர் டிரம்ப், தான்தோன்றி தனமாக எடுத்த முடிவுகள் தான். அமெரிக்க நலனை பற்றி கவலை கொள்ளாமல், தனது புகழுக்காக அவர் செய்த செயல்கள் தான் இப்போ, மக்களை எதிராக திரும்பவைத்து, படுதோல்வியை பரிசாக கொடுத்து இருக்கு.
டிரம்ப் கட்சி எந்த காரணமும் கொண்டு வெற்றி பெறக் கூடாது என்பதில், அமெரிக்கர்கள் உறுதியாக நின்றதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
எதிராக திரும்பிய முன்னெடுப்புகள்
இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது அவர் விதித்த கூடுதல் விதிகள், குடியரசு கட்சிக்கே எதிராக திரும்பி நின்றது. அமெரிக்காவின் நீண்டகால நட்பு நாடுகள், அதிருப்தியில் ஆழ்ந்தன.
அமெரிக்காவின் தடாலடி வரி விதிப்புகளால் பாதிக்கப்படாத நாடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, மூர்க்கத்தனமாக களமாடினார் அதிபர் டிரம்ப்.
அமெரிக்க நுகர்வோர்கள் பாதிப்பு
மற்ற நாடுகளின் பொருட்கள் மீது அதிக வரி விதிப்பதால், அமெரிக்க நுகர்வோர் தான் பெரிய பாதிப்பை சந்திப்பார்கள் என்பதை அதிபர் டிரம்ப் கடைசி வரை உணர்ந்து கொள்ளவே இல்லை.
உலக அளவில் அதிருப்தி
கனடா அமெரிக்காவோடு இணைக்கப்பட வேண்டும், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் மீது விமர்சனம், நேட்டோ கூட்டமைப்பு நாடுகளை சாடுவது என ஒவ்வொரு செயல்பாட்டிலும் அதிருப்தியை வலிந்து தேடிக் கொண்டார் டிரம்ப்.
நோபல் பரிசுக்காக ஏங்கிய டிரம்ப்
தனக்கு நோபல் பரிசு கொடுக்கணும் என்று 2 ஆண்டுகளாக குரல் கொடுத்து வரும் டிரம்ப், அமைதிக்கான பரிசு கிடைக்கவில்லை என்பதை அறிந்ததும், நோபல் கமிட்டி, நார்வே நாட்டையும் குறை கூறினார்.
தேவையற்ற போர்களில் முந்தைய ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வந்ததாக, கண்டித்து வந்த டிரம்ப், ஈரான் விவகாரத்தில் மூக்கை நுழைத்து, அமெரிக்காவின் பொருளாதாரத்தை நிலைகுலைய வைத்திருக்கிறார்.
உக்ரைன் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு
உக்ரைன் போரில் முதலில் ஜெலன்ஸ்கி பக்கம் நின்ற டிரம்ப், கடைசியில் ரஷ்யா தான் பெரிய நாடு, மோதாதீங்க அப்படின்னு அட்வைஸ் செய்து, தனது சுயரூபத்தை வெளிப்படுத்தினார்.
சர்வதேச அமைப்புகளுக்கு எதிர்ப்பு
ஐநா சபையின் துணை அமைப்புகள் மற்றும் 66க்கும் மேற்பட்ட சர்வதேச அமைப்புகளில் இருந்து டிரம்பின் நிர்பந்தத்தால், அமெரிக்கா வெளியேறியது மட்டுமின்றி, அவற்றுக்கான நிதியுதவியும் நிறுத்தப்பட்டது.
இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது சுலபம் அல்ல என்பதை உணர்ந்து தான். 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா 5 ஆயிரம் டாலர் வழங்கப்படும் அப்படின்னு அறிவித்தார்.
டிரம்பை வெறுக்கும் அமெரிக்கர்கள்
ஆனால் இதை முற்றிலுமாக அமெரிக்க மக்கள் நிராகரித்து இருக்கிறார்கள் என்பதை தான், இடைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
============