அமெரிக்காவில் மிகப்பெரிய எஃகு ஆலை : 1.5 லட்சம் கோடி முதலீடு, இந்திய நிறுவனத்திற்கு கிடைத்த மெகா திட்டம்..!

ஐயோவா மாநிலத்தில் 15 பில்லியன் டாலர் மதிப்பிலான எஃகு ஆலை அமைக்கும் திட்டத்தை எஸ்ஸார் குழுமத்திற்கு சொந்தமான நிறுவனம் முன்னெடுக்க உள்ளது ...
Trump Announces $15 Billion Iowa Steel Project Backed by Indian Company
Trump Announces $15 Billion Iowa Steel Project Backed by Indian CompanyGoogle
1 min read

அமெரிக்காவில் இந்திய நிறுவனம் :

அமெரிக்காவில் அமையவுள்ள மிகப்பெரிய எஃகு ஆலை கட்டுமான திட்டத்தை இந்திய நிறுவனமான எஸ்ஸார் குழுமத்திற்கு (Essar Group) சொந்தமான மெசாபி மெட்டாலிக்ஸ் (Mesabi Metallics) கைப்பற்றியுள்ளது.

இந்த திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஐயோவா மாநிலத்தில் அமைக்கப்படவுள்ள இந்த திட்டத்தின் மொத்த முதலீட்டு மதிப்பு 15 பில்லியன் அமெரிக்க டாலராகும்.

இந்திய மதிப்பில் இது ரூ.1.25 லட்சம் கோடிக்கும் அதிகம் என மதிப்பிடப்படுகிறது.

என்ன இந்த மெகா திட்டம்?

ஐயோவாவில் அமைக்கப்படவுள்ள இந்த எஃகு ஆலை, அமெரிக்காவின் மிகப்பெரிய எஃகு உற்பத்தி மையங்களில் ஒன்றாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தில் ஆண்டுக்கு 7.5 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இந்த ஆலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

பின்னர் உற்பத்தித் திறனை 10 மில்லியன் டன் வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய நிறுவனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு :

இந்த திட்டத்தை முன்னெடுக்க உள்ள மெசாபி மெட்டாலிக்ஸ் நிறுவனம், இந்தியாவின் எஸ்ஸார் குழுமத்திற்கு சொந்தமானது.

அமெரிக்காவின் தொழில்துறை வளர்ச்சியில் இந்திய நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கவுள்ளதால் இந்த ஒப்பந்தம் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்பாக, அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் டிரம்ப் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் :

இந்த எஃகு ஆலை திட்டத்தின் மூலம் சுமார் 6,000 கட்டுமான வேலைவாய்ப்புகளும், 1,750 நிரந்தர வேலைவாய்ப்புகளும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஐயோவா மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த திட்டம் முக்கிய பங்களிப்பை வழங்கும் என கூறப்படுகிறது.

இந்தியா - அமெரிக்கா பொருளாதார உறவின் புதிய அத்தியாயமா?

இந்திய நிறுவனத்திற்கு அமெரிக்காவில் இவ்வளவு பெரிய தொழில்துறை திட்டம் கிடைத்திருப்பது, இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார மற்றும் முதலீட்டு உறவுகள் வலுவடைந்து வருவதை காட்டுவதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்க தொழில்துறையில் இந்திய நிறுவனங்களின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், எஸ்ஸார் குழுமத்தின் இந்த முதலீடு புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in