Trump Says : இந்தியாவை பார்த்து அமெரிக்கா கற்றுக்கொள்ள வேண்டும்! : வங்கிகளுக்கு அறிவுரை..!

இந்தியாவின் 7.8% பொருளாதார வளர்ச்சியைச் சுட்டிக்காட்டி, அமெரிக்காவில் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என மத்திய வங்கிக்கு அழுத்தம் கொடுத்துள்ள அதிபர் டொனால்டு டிரம்ப்...
Trump Praises India's Economic Growth! Calls on America to Learn from India
Trump Praises India's Economic Growth! Calls on America to Learn from IndiaGoogle
1 min read

இந்தியாவை உதாரணம் காட்டிய டிரம்ப் :

இந்தியாவை பார்த்து அமெரிக்கா கற்றுக்கொள்ள வேண்டும்... அப்போதுதான் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை இன்னும் அதிகரிக்க முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியிருக்கிறார்.

அதுவும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உதாரணமாகக் காட்டி, அமெரிக்க மத்திய வங்கியான Federal Reserve-ஐ கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

அப்படி என்னதான் இந்தியாவைப் பற்றிப் பேசினார் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு வாங்க பார்க்கலாம்.

வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் – டிரம்ப் வலியுறுத்தல்:

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அமெரிக்காவில் வட்டி விகிதம் மிகவும் அதிகமாக இருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

மேலும், அமெரிக்காவின் பொருளாதாரம் சிறப்பாகச் செயல்படும்போதுகூட மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துவதாகவும், இதனால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.

அமெரிக்க மத்திய வங்கி அரசியல் ரீதியாகச் செயல்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

இங்கேதான் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. வட்டி விகிதம் என்றால் என்னன்னு முதலில் புரிஞ்சுக்கணும்.

இந்தியாவின் 7.8% வளர்ச்சி – என்ன காரணம்?

இந்தியாவை உதாரணமாகக் குறிப்பிட்ட டிரம்ப், இந்தியாவில் வட்டி விகிதம் குறைவாக இருப்பதால்தான் 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்ட முடிகிறது என்று கூறியிருக்கிறார்.

உண்மையில், 2026 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சி 7.8 சதவீதமாகப் பதிவாகியிருக்கிறது.

அதே நேரத்தில், இந்திய ரிசர்வ் வங்கி 2026 அக்டோபரில் தனது ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தி 5.5 சதவீதமாக நிர்ணயித்திருக்கிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, அந்நாட்டின் Federal Reserve அக்டோபர் 28ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி, வட்டி விகிதம் 3.75 முதல் 4 சதவீதமாக இருக்கிறது.

20% GDP வளர்ச்சி சாத்தியமா?

இதற்கிடையில் டிரம்ப் பேசிய இன்னொரு விஷயம்தான் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

அதாவது, அமெரிக்காவில் வட்டி விகிதத்தைக் குறைத்தால், தற்போது 4 சதவீதமாக இருக்கும் பொருளாதார வளர்ச்சியை 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்த முடியும் என்று அவர் கூறியிருக்கிறார்.

மேலும், பொருளாதார வளர்ச்சி அதிகரித்தால் அமெரிக்காவின் கடன்களைக்கூட மிக விரைவாக அடைத்துவிட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.