'தமிழி' எழுத்துக்களோடு 2,000 ஆண்டுகள் பழமையான மோதிரங்கள் : தாய்லாந்து அகழாய்வில் கிடைத்த தமிழர்களின் பொக்கிஷம்...!

தாய்லாந்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், ”தமிழி” என்ற எழுத்துக்களோடு, இரண்டு தங்க மோதிரங்கள் கிடைத்துள்ளன.
Two gold rings bearing "Tamizhi" script have been found during excavations in Thailand
Two gold rings bearing "Tamizhi" script have been found during excavations in ThailandAI generated
1 min read

தாய்லாந்தில் அகழாய்வு

தாய்லாந்தின் பெட்சாபுரி மாகாணத்தில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்குள்ள ஒரு பகுதியில் இரண்டு தங்க மோதிரங்கள் கண்டெடுக்கப்பட்டன. மனித எலும்பு குவியல்களுக்கு நடுவே இவை கிடைத்தன.

இந்த மோதிரங்கள் மூலம் அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இரண்டு தங்க மோதிரங்கள்

'டான் யாய் தாங் (Don Yai Thong) என்ற இடத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியின் போதுதான் இந்த மோதிரங்கள் கிடைத்தன. எலும்புக் கூட்டுடன் கண்டெடுக்கப்பட்ட மற்றொரு மோதிரம், எந்தவொரு டிசைனும் இல்லாத சாதாரண தங்க மோதிரம் என்று கிடைத்தது.

இந்த மோதிரங்களுக்குச் சொந்தக்காரர், பழங்கால இந்தியாவின் வணிகர் சமூகத்தைச் (வைசியர்) சேர்ந்தவராக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறினர்.

தமிழி எழுத்துக்களோடு தங்க மோதிரம்

ஒரு மோதிரத்தில் இடம்பெற்று இருந்த எழுத்துக்கள் முதலில் பிராமி என்று தவறாகப் படிக்கப்பட்டு, பின்னர் இடவல மாற்றமாக (Mirror Image எழுதப்பட்ட தமிழி எழுத்துக்கள்தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அளர் வைரதன் - தமிழ்ப் பெயர்

அச்சிடுவதற்கு ஏதுவாக தலைகீழாகப் பொறிக்கப்பட்டுள்ள அந்த மோதிரத்தில் அளர் வைரதன் என்ற தமிழரின் பெயர் உள்ளது உறுதியாகியுள்ளது.

'அளர்' என்பது வளமான மருத நிலத்தைக் குறிக்கும்.தமிழ் சொல். அகழாய்வு நடைபெற்ற பகுதியில் ஏற்கனவே, வெண்கல முரசுகளின் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

இரும்பு காலத்தை சேர்ந்த இவை, சுமார் 1,500 முதல் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதக் குடியிருப்புகளில் இருந்திருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.

செல்வந்தர்களின் இறுதிச் சடங்கு

இப்போது வரை, இங்கே 8 மனித எலும்புக்கூடுகள், வெண்கலம் மற்றும் தங்க நகைகள், மண்பாண்டங்கள் மற்றும் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும், அந்த காலத்தில் வாழ்ந்த வசதியானவர்கள் அல்லது சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்களின் இறுதிச் சடங்கு முறையைக் காட்டுவதாக உள்ளன.

அகழ்வாராய்ச்சிப் பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் முடிவடையும் என்றும், அதன் பிறகு இங்கு கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுப் பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்காகக் காட்சிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

==================

logo
Thamizh Alai
www.thamizhalai.in