அமெரிக்கா- ஈரான் இடையே 2 வாரம் போர் நிறுத்தம் : ஹோர்முஸ் நீரிணை திறப்பு : பாக். மத்தியஸ்தம், நிபந்தனைகள் என்ன...!

அமெரிக்கா - ஈரான் இடையே இரண்டு வார போர்நிறுத்தம் அமலுக்கு வந்து இருக்கிறது.
two-week ceasefire has come into effect between the US and Iran
two-week ceasefire has come into effect between the US and Irangoogle
1 min read

ஈரான் போர்

Iran ceasefire deal a partial win for Trump - but at a high cost : ஈரான் மீதான தாக்குதலை பிப்ரவரி 28ம் தேதி முதல் அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக நடத்தி வருகின்றன. அதற்கு பதிலடியாக வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தது.

எரிபொருளுக்கு தட்டுப்பாடு

மேலும் ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது.

பாகிஸ்தான் சமரச முயற்சி

இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டு தலைவர்கள், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மேற்கொண்ட பேச்சுவார்த்தை மூலம் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்கப்பட்டு இருக்கிறது.

போர்நிறுத்தம் அமல்

இதனை சமூக வலை தளத்தில் பதிவிட்டு இருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், “ பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனீரின் கோரிக்கையை ஏற்று ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி வைக்கிறேன்.

2 வாரம் தாக்குதல் கிடையாது

இரண்டு வார காலத்துக்கு ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்ள மாட்டோம். ஹோர்முஸ் ஜலசந்தியை முழுவதுமாக, உடனடியாக மற்றும் சரக்கு கப்பல்கள் பாதுகாப்பாக கடக்க வேண்டும்” என சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் ஒப்புதல்

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் இந்த இரண்டு வார கால போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறும்போது, தங்களுக்கு எதிரான தாக்குதல் நிறுத்தப்பட்டால் தாங்கள் மேற்கொள்ளும் தாக்குதல் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் ஜலசந்தி தடை நீக்கம்

மேலும், ஈரான் புரட்சிகர இஸ்லாமிய படை உடன் இணைந்து ஹோர்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து உறுதி செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.

10ம் தேதி அமைதி பேச்சுவார்த்தை

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளை மறுநாள் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் எனத் தெரிகிறது. இதன்மூலம், ஈரான் பிரச்னைக்கு நிரந்தர முடிவு எட்டப்படும் என்று தெரிகிறது.

நிபந்தனைகள் என்னென்ன...

!. ஈராக், லெபனான், ஏமன் மீதான போரை முழுவதுமாக நிறுத்த வேண்டும்.

2. ஈரான் மீதான போரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்

3. அனைத்து விதமான மோதல்களையும் முழுமையாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

4. ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்து பாதுகாப்பான நெறிமுறைகளை வகுக்க வேண்டும்

5.ஈரானை மீண்டும் கட்டமைப்பதற்கான தொகையை முழுமையாக வழங்க வேண்டும்.

6. ஈரான் மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்க வேண்டும்.

7. அமெரிக்கா முடக்கி வைத்திருக்கும் ஈரானின் சொத்துகள் மற்றும் நிதியை விடுவிக்க வேண்டும்.

என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.

========================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in