”போர், எல்நினோ’’ : உலகளவில் உணவு பொருட்கள் விலை பல மடங்கு உயர்வு : 3 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம், மக்கள் பாதிப்பு...!

உலகளவில் உணவுப் பொருட்களின் விலை 3 ஆண்டுகளில் இல்லாத அளவில் உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
United Nations Food and Agriculture Organization has expressed concern over the rise in global food prices to level
United Nations Food and Agriculture Organization has expressed concern over the rise in global food prices to levelAI generated
1 min read

United Nations Food and Agriculture Organization has expressed concern over the rise in global food prices to levels not seen in three years

உணவு பொருட்கள் விலை உயர்வு

ஒருபக்கம் ஈரான் - அமெரிக்கா போர், இன்னொரு பக்கம் ரஷ்யா -உக்ரைன் போர் உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்து வருகிறது.

இத்போதாது என்று, ஐரோப்பாவில் நிலவும் கடுமையான வறட்சி, எல் நினோ (El Nino) அச்சுறுத்தல் வர்த்தக பிரச்சினைகளும் உணவுப்பொருள் சந்தையை பாதித்து வருகின்றன.

தானியங்களின் விலை உச்சம்

இதனால் தானியங்களின் விலை மூன்று ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளதாகத் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்க்கரையின் விலை மட்டும் கடந்த ஓராண்டில் இல்லாத புதிய உச்சத்தையும் தொட்டுள்ளது. பல நாடுகளில் சர்க்கரை பற்றாக்குறை தலைதூக்கி இருக்கிறது.

சர்வதேச அளவில் வர்த்தகம் செய்யப்படும் உணவுப் பொருட்களின் மாதாந்திர விலை குறியீடு சராசரியாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 133 புள்ளி 3 புள்ளிகளாக இருப்பதாகவும், இது கடந்த 2022ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பதிவான அதிகப்பட்ச அளவு என்றும் தெரிக்கப்பட்டுள்ளது.

உரத் தட்டுப்பாடு

புவிசார் அரசியல் நெருக்கடிகளால் உரங்களின் விநியோகம் பாதிக்கப்பட்டு, உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது.

உரச் செலவு அதிகரித்தால், விவசாயிகள் உற்பத்தி செலவை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்படும்; அதன் தாக்கம் உணவுப் பொருட்களின் விலையிலும் பிரதிபலித்து வருகிறது.

உணவுச் சங்கிலி

போக்குவரத்துச் சிக்கல்கள் மற்றும் வர்த்தகக் கட்டுப்பாடுகள் காரணமாக உணவுப் பொருட்களின் விநியோகம் உலகளவில் குறைந்து இருக்கிறது.

விலை அதிகரித்த பொருட்கள்

தானியங்கள் மற்றும் சமையல் எண்ணெய் வகைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சர்க்கரை மற்றும் இறைச்சி வகைகளின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளதால் மக்களின் மாதச் செலவுகளுக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சாமான்ய மக்களுக்கு இந்த விலை உயர்வு கடுமையான பாதிப்பு உண்டாக்கி வருகிறது.

உணவுப் பொருட்களின் விலை உயர்வு என்பதற்கு ஒன்றை மட்டுமே காரணமாக கூற முடியாது. போர் , எரிபொருள் , உரம் , காலநிலை மாற்றம் , விநியோகச் சங்கிலி பாதிப்பு என அனைத்தும் சேரும் போது, பாதிப்பை தவிர்க்கவே முடியாது என்பது தான் உண்மை

=====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in