

20 ஆண்டுகளாக இஸ்ரேல் பிரதமர்
20 ஆண்டுகளாக இஸ்ரேலின் அதிபராக இருப்பவர் பெஞ்சமின் நெதன்யாகு. 2023ம் ஆண்டு ஹமாஸ் தாக்குதல், அதன்பிறகு ஈரான் போருக்கு பிறகு, அவர் சந்திக்கும் முதல் தேர்தல் இது.
120 உறுப்பினர்களை கொண்டது இஸ்ரேல் நாடாளுமன்றம், நெசட் என்று அழைக்கப்படும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற 61 இடங்கள் தேவை.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு
இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. பிரதமர் நெதன்யாவுக்கும் முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசன்கோட்டுக்கும் இடையே கடும் போட்டி இருந்தது.
இஸ்ரேல் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
ஐசன்கோட் முன்னிலை
தேர்தலுக்குப் இருபிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி, ஐசன்கோட் நெதன்யாகுவை விட சற்றே முன்னிலையில் இருப்பதாக தெரிகிறது.
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்
இணையவழி அச்சுறுத்தல்கள் மற்றும் ஹேக்கிங் காரணமாக, இஸ்ரேல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதில்லை. இன்னும் பாரம்பரிய வாக்குச்சீட்டு முறையே நடைமுறையில் உள்ளது.
இஸ்ரேலில் எந்தொரு தனி வேட்பாளருக்கும் மக்கள் வாக்களிப்பதில்லை. மாறாக, அவர்களுக்குப் பிடித்த அரசியல் கட்சியின் ஒட்டுமொத்த வேட்பாளர்கள் அனைவருக்கும் வாக்களிப்பார்கள்.
அதன்படி, ஒரு கட்சி பெறும் வாக்குச் சதவீதத்தின் அடிப்படையில் அதற்கு நாடாளுமன்ற இடங்கள் அதாவது விகிதாசாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் ஒதுக்கப்படும்.
ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவை
நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க ஒரு கட்சி அல்லது கூட்டணிக்கு குறைந்தபட்சம் 61 இடங்கள் தேவை. இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை எந்தவொரு தனி கட்சி அல்லது கூட்டணிக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்தது இல்லை.
நெதன்யாவுக்கு எதிர்ப்பு
போரை கையாண்ட விதம், பணயக் கைதிகளை மீட்பதில் ஏற்பட்ட தாமதம் போன்றவற்றால் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இது தேர்தலில் எதிரொலித்து இருக்கிறது.
காடி ஐசன்கோட்-க்கு பெருகிய ஆதரவு
அதேசமயம், அவருக்கு போட்டியாக களத்தில் நிற்கும் முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசன்கோட்-க்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி இருக்கிறது.
நவ. 4ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அக்டோபர் 30 அன்று தபால் வாக்குகள் மற்றும் தூதரக வாக்குகளை எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். நவம்பர் 4 அன்று இஸ்ரேலின் மத்திய தேர்தல் குழு அதிகாரப்பூர்வமான இறுதி தேர்தல் முடிவுகளை வெளியிடும்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்
வாக்குப்பதிவு முடிந்தவுடன் இஸ்ரேலிய ஊடகங்கள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அதன்படி, ஐசன்கோட் அணி நெதன்யாகுவை விட சற்றே முன்னிலையில் இருப்பதாகவும், தெளிவான வெற்றியாளர் இல்லை என்றும் கூறுகின்றன.
பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல்
இஸ்ரேல் தேர்தலில் காடி ஐசன்கோட் அணி அதிக எண்ணிக்கையிலான இடங்களை வென்றாலும், பெரும்பான்மையைப் பெற முடியாது என்று இஸ்ரேலிய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தனிப்பெரும் கட்சியாக நெதன்யாகுவின் லிகுட்
இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நெதன்யாகுவின் லிகுட் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது, ஆனால் பெரும்பான்மை கிடைக்காது.
சமமான இடங்களை வெல்ல வாய்ப்பு
ஐசன்கோட் கூட்டணியும், நெதன்யாகு கூட்டணியும் சமமாக 51 இடங்களை மட்டுமே வெல்ல வாய்ப்பு உள்ளது. பாலஸ்தீன அரபு கட்சிகள் 18 இடங்கள் வெல்லக்கூடும் என்பதால், புதிய அரசை தீர்மானிக்கும் சக்தியாக மாற வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
கடும் நெருக்கடியில் நெதன்யாகு
அரபு கட்சிகளின் ஆதரவை பெறுவதில், நெதன்யாகுவுக்கு பெரிய சிக்கல் இருக்கிறது. இவை இஸ்லாமிய கட்சிகள், ஆட்சிக்கு இவங்க ஆதரவு கிடைக்க வேண்டும் என்றால், ஈரான் உள்ளிட்ட அரபு நாடுகள் மீதான தன்னோட நிலைப்பாட்டை நெதன்யாகு மாற்றி கொள்ள வேண்டி இருக்கும்.
அதேசமயம், ஆதரவை பெற முயற்சிக்காமல், பிரதமர் பதவியை இழந்தால், அதன்பிறகு பெரிய நெருக்கடி காத்திருக்கிறது. ஆட்சியை பறிகொடுத்தால், பிறகு பாயும் வழக்குகள், நெதன்யாகுவை சிறைக்கு கொண்டு செல்லவும் வாய்ப்பு இருக்கிறது.
=============================================