
US Secretary Chris Wright Invites India for Oil Trade : அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நட்பு போற்றி புகழும் வகையில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி இரு நாடுகளும் தங்களுக்குள் வர்த்தகம், பண பரிமாற்றம், ஏற்றுமதி இறக்குமதி உள்ளிட்டவைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மேலும் வர்த்தகத்தை வளர்க்கும் வகையில் புது வித முயற்சியாக அமெரிக்காவுடன் எண்ணெய் வர்த்தகம் மேற்கொள்ளுமாறு இந்தியாவுக்கு அந்நாட்டு எரிசக்தித்துறை அமைச்சர் கிறிஸ் ரைட் அழைப்பு விடுத்துள்ளார்.
நாடுகளுடன் நட்புணர்வில் நரேந்திர மோடி :
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், பொதுவாக பல நாடுகளுடன் நட்புணர்வு பாராட்டி, இந்தியாவின் வளர்ச்சிக்காக பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவர்களுடன் வர்த்தகம் மேற்கொள்வது குறித்தும், நாட்டின் வளர்ச்சி குறித்தும் புது வித முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் அவருடன் அதிகமாக தங்களை ஈடுபடுத்தி கொண்டு வர்த்தகம் மேற்கொள்வதில்,அமெரிக்காவின் பங்கு இன்றியமையாதது. இந்நிலையில், எங்களுடன் எண்ணெய் வர்த்தகம் மேற்கொள்ளுங்கள் என்று அமெரிக்காவின் எரிசக்தித்துறை அமைச்சர் கிறிஸ் ரைட் இந்தியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கிறிஸ் ரைட் சந்திப்பு :
இதுதொடர்பாகச் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், உலகளவில் ஏராளமான நாடுகள் எண்ணெய் விற்பனை செய்து வரும் நிலையில், ரஷ்யாவிடம் மட்டும் இந்தியா வர்த்தகம் செய்ய வேண்டிய(India Russia Oil Trade) அவசியமில்லையெனத் தெரிவித்தார். குறைந்த விலையில் எண்ணெய் கிடைப்பதாலேயே ரஷ்யாவிடம் இந்தியா வர்த்தகம் செய்வதாகக் குறிப்பிட்ட அவர், இந்த வர்த்தகத்தால் பெறப்படும் நிதியை உக்ரைன் மக்களுக்கு எதிராக ரஷ்யா பயன்படுத்துவதை இந்தியா உணர வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் படிக்க : ”அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடு இந்தியா” : மார்கோ ரூபியோ உறுதி
ரஷ்யா எதிர்ப்பு :
ரஷ்யாவை தவிர வேறு எந்த நாட்டுடன் வர்த்தகம் மேற்கொண்டாலும், அமெரிக்காவுக்கு சம்மதம் எனவும் கூறினார். இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் நோக்கம் அல்ல எனவும், ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே காரணம் எனவும் தெரிவித்தார். இந்தியாவுடன் நல்லுறவை பேணவே அமெரிக்கா விரும்புவதாகவும் கிறிஸ் ரைட்(Chris Wright on India) தெரிவித்தார்.