அமெரிக்கா, இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழப்பு

US Israel Attack on Iran Death Toll Rise : ஈரான் மீதான இஸ்ரேல் அமெரிக்கா தாக்குதலால் இதுவரை அங்கு 500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
US Israel Iran War Update US, Israeli military strikes kill 555 in Iran so far full updates in Tamil
US Israel Iran War Update US, Israeli military strikes kill 555 in Iran so far full updates in Tamilgoogle
1 min read

ரெட் க்ரெசன்ட் சொசைட்டி’ (Red Crescent Society) தகவல்

US Israel Attack on Iran Death Toll Rise : ஈரான் இஸ்ரேல் அமெரிக்க நீடித்து வரும் போரால் ஈரானின் ‘ரெட் க்ரெசன்ட் சொசைட்டி’ (Red Crescent Society) (மார்ச் 2, 2026) வெளியிட்ட அறிக்கையின் படி ‘இஸ்லாமியக் குடியரசான ஈரானை இலக்காகக் கொண்டு அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 555 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 131 நகரங்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அணு நிலையம் மீதும் தாக்குதல்

தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து ஈரான் அணு நிலையம் மீதும் தாக்குதலை நிகழ்த்தி உள்ளது.

ஏயுஏ வின் ஈரான் தூதர் கண்டனம்

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தொடர் தாக்குதலை தொடர்ந்து ஏயுஏ (International Atomic Energy Agency) அமைப்பில் ஈரானின் தூதராக உள்ள ரெசா நஜாபி (Reza Najafi), அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட சட்டவிரோத மற்றும் கொடூரமான தாக்குதல்களை நான் கண்டிக்கிறேன் ,என்று தெரிவித்தார்.

ஈரான் படை தலைமையகத்தை அழித்த அமெரிக்க ராணுவம்

ஈரான் இஸ்ரேல் போரை தொடர்ந்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (ஐஆர்ஜிசி) தலைமையகத்தை அழித்துவிட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

ஐஆர்ஜிசி என்பது என்ன யாரால் நிறுவப்பட்டது

ஐஆர்ஜிசி (IRGC - Islamic Revolutionary Guard Corps) என்பது ஈரான் ராணுவத்தின் சக்தி வாய்ந்த படைப் பிரிவாக இஸ்லாமிய புரட்சிகர காவல் படை ஆகும்.

இதனை கடந்த 1979-ல் இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு இஸ்லாமிய புரட்சிகர காவல் படையை காமேனி நிறுவி வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in