Trump Warns Iran : 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! : ஈரானுக்கு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை!

Donald Trump Warns Iran : மீண்டும் ஒரு நாடாக ஈரான் கட்டியெழுப்ப முடியாத நிலையை உருவாக்கும் வகையில், எளிதில் அழிக்கக்கூடிய இலக்குகளை தகர்ப்போம் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
US Israel Iran War Update We will strike 20 times harder! Donald Trump warns Iran!
US Israel Iran War Update We will strike 20 times harder! Donald Trump warns Iran!source:google
1 min read

ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் போர்

Donald Trump Warns Iran : கடந்த மாதம் 28 ஆம் தேதியில் இருந்து ஈரான் மீது இஸ்ரேலும் , அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் மற்றும் மதகுருவான அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார்.

ராணுவ தளங்கள் மீது தாக்குதல்

டெஹ்ரான், இஸ்ஃபஹான், கராஜ், கெர்மன்ஷா, கும் மற்றும் தப்ரிஸ் ஆகிய நகரங்களில் உள்ள இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

குழந்தைகள், பொதுமக்கள் உயிரிழப்பு

இதில் அரசியல் தலைவர்கள் முதல் குழந்தைகளும், பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் , அமெரிக்கா கூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான்

மேலும், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்திய ஈரான் பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்திருந்தது.

கப்பல்கள் தீக்கிரையாக்கப்படும்

மேலும், ஹோர்முஸ் நீரினையைக் அமெரிக்காவின் நட்பு நாடுகள் கடக்க நினைத்தால், அவர்களின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும், கப்பல்கள் அனைத்தும் தீக்கிரையாக்கப்படும் என ஈரான் அமெரிக்க நட்பு நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதன் காரணமாக இந்தியா உட்பட பல நாடுகளின் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடக்க முடியாமல் நிறுத்தப்பட்டன.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இதுவரை தாக்குதல் நடத்தியதை விட ஈரான் மீது இன்னும் 20 மடங்கு அதிகமாக தாக்குவோம் என்று கூறியுள்ளார்.

20 மடங்கு அதிகமாக தாக்குதல் நடத்தப்படும்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் எண்ணெய் போக்குவரத்தை முடக்க நினைத்தால் ஈரான் மீது இதுவரை தாக்குதல் நடத்தியதை விட இன்னும் 20 மடங்கு அதிகமாக தாக்குவோம் என்று கூறியுள்ளார். ஈரான் மீண்டும் கட்டியெழுப்ப முடியாமல் போகும்?

மேலும், மீண்டும் ஒரு நாடாக ஈரான் கட்டியெழுப்ப முடியாத நிலையை உருவாக்கும் வகையில், எளிதில் அழிக்கக்கூடிய இலக்குகளை தகர்ப்போம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மரணம், நெருப்பு மற்றும் சீற்றம் ஈரானின் மீது பொழியப்படும் - ஆனால் இதெல்லாம் நடக்கக்கூடாது என்று நான் நம்புகிறேன், பிரார்த்திக்கிறேன்!

அமெரிக்காவின் பரிசு

இது சீனாவிற்கும், ஹார்முஸ் ஜலசந்தியை அதிகமாகப் பயன்படுத்தும் அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்காவிலிருந்து கிடைத்த பரிசு. இது பெரிதும் பாராட்டப்படும் என்று நம்புகிறேன். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி! என்றும் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in