”Peace Agreement" அதிபர் டிரம்ப் - ஈரான் அதிபர் பெசஸ்கியான் கையெழுத்து : ஈரானுக்கு 28 லட்சம் கோடி நிதியுதவி...!

ஈரான் உடனான அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் அதிபர் பெசஸ்கியான் கையெழுத்திட்டனர்.
US President Donald Trump and Iranian President Pezeshkian signed a peace agreement
US President Donald Trump and Iranian President Pezeshkian signed a peace agreementgoogle
1 min read

ஈரான் போர் - அமெரிக்கா, இஸ்ரேல்

அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபடுவதாக கூறி, அந்நாட்டு மீது இஸ்ரேல், அதனைத் தொடர்ந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தின. பிப்ரவரி 28ம் தேதி தொடங்கிய இந்த சண்டை, ஓரிரு வாரங்களில் முடிவுக்கு வந்து விடும் என்று மேற்கத்திய நாடுகள் போட்ட கணக்குகள் தவிடுபொடியாகின.

கச்சா எண்ணெய் சப்ளை துண்டிப்பு

ஈரானும் பதிலடி கொடுக்க போர் உக்கிரம் அடைந்தது. இன்னோரு பக்கம் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடி, கச்சா எண்ணெய் சப்ளையை துண்டித்தது ஈரான்.

அமைதி பேச்சுவார்த்தை

இதனால், உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. போரால் ஈரானை ஒடுக்கி விட முடியாது என்ற யதார்த்த நிலையை உணர்ந்த அமெரிக்கா பேச்சுவார்த்தையை கையில் எடுத்தது.

அமைதி உடன்படிக்கை

பலகட்ட முயற்சிகளுக்கு பிறகு போர் நிறுத்தம் செய்யப்பட, ஹோர்முஸ் ஜலசந்தி மீதான கட்டுப்பாட்டை விலக்கிய ஈரான், சமாதானத்திற்கு வந்தது.

14 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தம்

14 அம்சங்கள் கொண்ட அமைதி உடன்படிக்கை தயார் செய்யப்பட்டது. ஈரான் மறுகட்டமைப்புக்கு ரூ.28 லட்சம் கோடி நிதி உதவி உட்பட 14 முக்கிய முடிவுகள் இதில் இடம்பெற்று உள்ளன.

அமைதி ஒப்பந்தம் - டிரம்ப் கையெழுத்து

இந்தநிலையில், வரலாற்று சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.

அதிபர் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் பெசஸ்கியான் ஆகியோர் மின்னணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாக 60 நாட்கள் ஆகும்.

ஈரானுக்கு 28 லட்சம் கோடி நிதியுதவி

ஈரான் மறுகட்டமைப்புக்கு ரூ.28 லட்சம் கோடி நிதி உதவி அளிக்கப்படுமென்பது உட்பட 14 அம்ச அறிக்கையை வெளியிட்டது அமெரிக்க அரசு.

ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

இதற்கிடையே அமைதி ஒப்பந்தப்படி நடக்காவிட்டால் ஈரான் மீது மீண்டும் குண்டு வீசுவோம் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்காது

பிரான்ஸில் ஜி7 உச்சி மாநாட்டிற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், அமைதி ஒப்பந்தப்படி ஈரானால் அணு ஆயுதத்தை உருவாக்கவோ, வாங்கவோ முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மற்ற நாடுகளிடம் பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருக்கும்போது, ​​ஈரானிடம் அவை இல்லாமல் இருப்பது நியாயமற்றது என்றும் டிரம்ப் கூறினார்.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in