உக்ரைன்-ரஷ்யா சண்டை, 3ம் உலகப் போராக மாறும்! : டிரம்ப் எச்சரிக்கை

Donald Trump Warns Russia Ukraine War Leads World War 3 : உக்ரைன் - ரஷ்யா இடையே நடைபெற்று வரும் சண்டை, 3ம் உலகப் போராக உருவெடுக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
President Donald Trump has warned that the ongoing conflict between Ukraine and Russia risks escalating into World War 3
President Donald Trump has warned that the ongoing conflict between Ukraine and Russia risks escalating into World War 3Truth Social
1 min read

ரஷ்யா - உக்ரைன் போர்

Donald Trump Warns Russia-Ukraine War Could Lead To "World War 3" : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் 2014 முதல் தொடர்கிறது. ஆனால் 2022 பிப்ரவரி 24 ரஷ்யா பெரிய அளவிலான தாக்குதலை நடத்த முழுமையாக சண்டை நடைபெற்று வருகிறது. இந்தப் போரை நிறுத்த அமெரிக்க மேற்கொண்டு வரும் எந்த முயற்சியும் இதுவரை பயனளிக்கவில்லை.

அமெரிக்காவின் முயற்சிகள் வீண்

இந்த நிலையில், "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம்பேசியபோது, "ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து கவலை தெரிவித்தார்.

25,000 பேர் கொல்லப்பட்டனர்

சென்ற மாதம் மட்டும் 25,000 பேர் உக்ரைன் போரில் கொல்லப்பட்டுள்ளனர்; அதில் பெரும்பாலானோர் ராணுவ வீரர்கள். உக்ரைன் போரில் மக்கள் கொல்லப்படுவதை தடுக்கவே அமெரிக்கா விரும்புகிறது. போரை நிறுத்த அமெரிக்கா கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறது.

3ம் உலகப் போருக்கு வாய்ப்பு

இதுபோன்ற நிகழ்வுகள் 3ம் உலகப்போரை நோக்கி தள்ளும்; அதை அமெரிக்கா விரும்பவில்லை. போர் நிறுத்த முயற்சி தவிர்த்து அமெரிக்கா, உக்ரைன் போரில் எந்த விதத்திலும் தலையிடவில்லை. போரில் அமெரிக்கா தலையிடுவதை உக்ரைனும் ஐரோப்பாவும் விரும்புகின்றன.

உக்ரைனுக்கு நிதியுதவி

அமெரிக்கா 350 பில்லியன் டாலர் வரை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது; ஆனால் அதில் எந்த பலனும் இல்லை. இருநாடுகளும் நிலைமை புரிந்து கொண்டு சண்டையை நிறுத்த முன்வர வேண்டும் " இவ்வாறு அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்தார்.

--------------

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in