

அமெரிக்காவின் வேகம் குறையாது
Donald Trump on Iran War : ஈரான் மீதான தாக்குதல் பற்றி ஊடகங்களுக்கு பேட்டியளித்த டிரம்ப், “ ஈரானின் பரப்பளவு,ராணுவ நிலவரத்தைக் கணக்கில் கொண்டு போர் நிலவரத்தை கண்காணித்து வருவதாக கூறினார்.
இந்தத் தாக்குதல்கள் தற்காலிகமானவை அல்ல, அமெரிக்காவின் அனைத்து இலக்குகளும் எட்டப்படும் வரை போரின் வேகம் குறையாது.
கமேனி உட்பட 48 முக்கிய தலைவர்கள் கொலை
இதுவரை நடைபெற்ற தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உட்பட 48 முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இது நாங்கள் எதிர்பார்த்ததை விடப் மிகப்பெரிய வெற்றி.
அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு
அதே நேரத்தில், இந்தப் போரில் மூன்று அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். அவர்கள் மிகச்சிறந்த வீரர்கள். போர்க்களத்தில் இத்தகைய உயிரிழப்புகள் துரதிர்ஷ்டவசமானவை.
தாக்குதலை நிறுத்த மாட்டோம்
இப்போது பேச்சுவார்த்தைக்கு வர ஈரான் விரும்புகிறது. கடந்த வாரமே பேசியிருக்க வேண்டும். காலம் கடந்து விட்டது, தற்போதைக்குத் தாக்குதல்கள் தொடரும்.
அணு ஆயுதம் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளைக் கொண்டுள்ள ஈரான், நாகரிக உலகிற்கே பெரும் அச்சுறுத்தல் என்பதால் இந்தத் தாக்குதல் அவசியமானது.
நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகளின் தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். அமெரிக்க படைகளின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும்.
வளைகுடா நாடுகளில் பதற்றம்
ஈரானின் ராணுவ மற்றும் பொருளாதார மையங்களைக் குறிவைத்துத் தொடர்ந்து துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்படும் என்பதால், வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றம் இன்னும் சில வாரங்களுக்கு தொடரும்.
ஈரான் கடற்படை கப்பல்கள் மூழ்கடிப்பு
ஈரானிய கடற்படையின் முக்கிய கப்பல்களை நாங்கள் அழித்து மூழ்கடித்து விட்டோம். மீதமுள்ளவற்றை தேடி வருகிறோம். அவைகளும் விரைவில் கடலின் அடிப்பகுதியில் மிதக்கும்.
ஒரு வித்தியாசமான தாக்குதலில், அவர்களின் கடற்படை தலைமையகத்தை நாங்கள் பெருமளவில் அழித்து விட்டோம். அவர்களின் கடற்படை மிகச் சிறப்பாக செயல்படுகிறது அதை மறுக்க முடியாது”. என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
ஈரானில் ஜனநாயக ஆட்சி
இந்த நேரத்தில் ஈரானிய மக்கள் ஆட்சி நிர்வாகத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். ஈரானின் ஐஆர்ஜிசி, ராணுவம், காவல் துறையை சேர்ந்த வீரர்கள் போரிட விரும்பவில்லை. அவர்கள் ஈரானின் தேசப்பற்றாளர்களுடன் இணைவார்கள் என உறுதியாக நம்புகிறேன்.
4 வாரம் தாக்குதல் தொடரும்
ஈரானின் தீய சக்திகள் மீது அமெரிக்காவின் துல்லிய தாக்குதல் தொடரும். இந்த தாக்குதல் ஒரு வாரம் வரை நீடிக்கலாம். ஒரு வாரத்தையும் தாண்டி செல்ல வாய்ப்பு இருக்கிறது. சுமார் 4 வாரங்கள் வரை நீடிக்கலாம்
உலகம் அமைதி பாதைக்கு திரும்பும்
எங்களது குறிக்கோள் நிறைவேறும் வரை தாக்குதல் தொடரும். இதன்மூலம் மத்திய கிழக்கு முழுவதும் அமைதி திரும்பும். மத்திய கிழக்கு மட்டுமன்றி உலகம் முழுவதுமே அமைதி திரும்பும்.
பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானின் இப்போதைய ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். முந்தைய தாக்குதல் களைவிட அதிதீவிரமாக தாக்குதல் நடத்துவோம் என்கின்றனர்.
பதில் தாக்குதல் நடத்தினால் பேரழிவு
அவ்வாறு பதில் தாக்குதல் நடத்தாமல் இருப்பது ஈரான் ஆட்சியாளர்களுக்கு நல்லது. ஒருவேளை அவர்கள் தாக்குதல் நடத்தினால் நாங்களும் தாக்குதல் நடத்துவோம்.
எங்களது தாக்குதல், உலகம் இதுவரை காணாத வகையில் அதிதீவிர தாக்குதலாக இருக்கும். இதை ஈரான் ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று அதிபர் டிரம்ப் எச்சரித்தார்.
================