

பாதுகாப்பு துறை மந்திரிகள் கலந்து கொண்டனர்
India America Defence Deal 2025 : கோலாலம்பூர், மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஏசியான் அமைப்பின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
ராஜ்நாத் சிங் பங்கேற்பு
அதன்படி, இந்தியா சார்பில் இந்த மாநாட்டில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், ராஜ்நாத் சிங் அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி பெடி ஹெங்செத்தை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்தியா - அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 10 ஆண்டுகளுக்கான இந்த ஒப்பந்தம் இருநாட்டு ராணுவம், பாதுகாப்பு மேம்பாட்டிற்கு அடித்தளமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இந்தியா , அமெரிக்கா இடையே வர்த்தக மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவிற்கு டிரம்ப் இழைக்கும் சிக்கல்
கடந்த ஆண்டின் முதலே அமெரிக்க தொடர்ந்து, இந்தியாவிற்கு பல்வேறு இன்னல்களை இளைத்து வருகிறது. அந்த வரிசையில், சில நாட்களுக்கு முன்பு இந்தியாவிற்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரிவிதிப்பு கொள்கையை விதித்தார். இதனால், இந்தியா மட்டுமல்லாது உலகநாடுகள் அனைத்தும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது.
இந்தியாவில் பொருளாதார நெருக்கடி
இதனால் எதிரொலியாக குறிப்பாக இந்தியாவில் பொருளாதார நெருக்கடி, தஙகம் விலை என நாளுக்கு நாள் விலையுயர்வு உச்சத்தை தொட்டது. இதனால், இந்திய மக்கள் அனைவரும் கடும் சிரமத்திற்க்குள்ளாகினர். இதைத்தொடர்ந்து, டிரம்ப் இந்தியா தான் சொல்வதை செய்வார்கள் என்ற வகையில் சில குறிப்பிட்ட அமெரிக்க நாட்டுக்கு எதிராக இருக்கும் நாடுகளை இந்தியாவுடன் ஒப்பிட்டு சில பிரச்சனைகளையும், வதந்திகளையும் பரப்பி வந்தார்.
மேலும் படிக்க : டிரம்ப் - ஜின்பிங் சந்திப்பு வெற்றி : சீனா மீதான வரி 10% குறைப்பு
ஆனால் இந்தியாவின் தரப்பில் சில கருத்துக்களுக்கு பதிலளித்தும், பதிலளிக்கமாலும் இந்திய தனது நிலையை வெளிப்படுத்தி வந்தது. ஆனால், ஆரம்பம் முதலே டிரம்பின் இந்த செயலால், இந்திய மக்கள் அனைவரும் விரக்தியில் இருந்தனர்.
இந்திய மக்கள் விமர்சனம்
இந்நிலையில், தற்போது கோலம்பூரில் நடைபெற்ற ஏசியான் அமைப்பின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் உச்சிமாநாட்டில், இந்தியாவின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சித் கலந்து கொண்டார். ராஜ்நாத் சிங் அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி பெடி ஹெங்செத்தை சந்தித்ததை அடுத்து, இருநாடுகளுக்கும் இடையே ஆன பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு. இந்திய மக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இது இனியாவது வரி விதிப்புகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்று சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.