டிரம்ப் - ஜின்பிங் சந்திப்பு வெற்றி : சீனா மீதான வரி 10% குறைப்பு

US Tariffs Cuts 10% on China After Donald Trump Xi Jinping Meet : தென்கொரியாவில் டிரம்ப் - ஜின்பிங் சந்திப்பை அடுத்து, சீனா மீதான வரியை அமெரிக்கா 10 சதவீதம் குறைத்து இருக்கிறது.
USA reduced tariffs on China by 10 percent following Donald Trump-Xi Jinping meeting in South Korea News in Tamil
USA reduced tariffs on China by 10 percent following Donald Trump-Xi Jinping meeting in South Korea News in TamilDonald Trump Xi Jinping Meeting in South Korea
1 min read

டிரம்ப் - ஜின்பிங் சந்திப்பு

US Tariffs Cuts 10% on China After Donald Trump Xi Jinping Meet : ஆசிய - பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு தென்கொரியாவின் புசான் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் இடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சவார்த்தை நடத்தினர். ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமாக நடைபெற்றது.

பேச்சுவார்த்தை வெற்றி - டிரம்ப்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு ட்ரம்ப், பேச்சுவார்த்தை மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது எனக் குறிப்பிட்டார். ஃபெண்டானில் (வலிகளைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் மருந்து) உற்பத்தியைத் குறைக்க ஜி ஜின்பிங் ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.

சீனா மீதான வரி குறைப்பு

அவர்கள் உண்மையிலேயே வலுவான நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். எனவே, சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57%ல் இருந்து 47% ஆக குறைத்துள்ளேன்(US New Tariffs on China). இனி, சீன பொருட்களுக்கான ஒட்டுமொத்த இறக்குமதி வரி 47% ஆக இருக்கும். எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம்(America China Trade Deal) ஏற்பட்டுள்ளது. ஓராண்டுக்கான ஒப்பந்தம் இது. இந்த ஒப்பந்தம் தொடரும் என நினைக்கிறேன். ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்பாக நாங்கள் இருவரும் மீண்டும் சந்தித்து விவாதிப்போம்.

உக்ரைன் பற்றி விவாதித்தோம்

அடுத்த ஆண்டு ஏப்ரலில் சீனாவுக்கு செல்கிறேன். அதன் பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்கா வருவார். சீனா உடனான அரிய மண் தாதுக்கள் தொடர்பான பிரச்சினையும் தீர்க்கப்பட்டுள்ளது. அது உலகத்துக்கானது. தைவான் குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. அதேநேரத்தில், உக்ரைன் குறித்து நாங்கள் அதிகம் விவாதித்தோம்.

மேலும் படிக்க : சீனாவிற்கு 100 சதவிகித வரி! டிரம்பின் அடுத்த நகர்வு என்ன?

போரை முடிவுக்கு கொண்டு வர, முடிவை எட்ட ஏதாவது செய்ய முடியுமா என்று நாங்கள் ஆலோசித்தோம். இந்த விஷயத்தில் ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்கு உதவப் போகிறார். மேலும், உக்ரைன் விஷயத்தில் நாங்கள் இணைந்து செயல்படப் போகிறோம்" இவ்வாறு ட்ரம்ப்(Donald Trump on Xi Jinping) தெரிவித்தார்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in