

வரலாற்று சிறப்புமிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பு
அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகவே குடியுரிமை வழங்கும் "பிறப்புரிமை குடியுரிமை" (Birthright Citizenship) நடைமுறையை மாற்றுவதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டுள்ளது.
டிரம்பின் நிர்வாக உத்தரவு ரத்து
அதிபர் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் போது , சட்டவிரோதமாக அல்லது தற்காலிக விசாவில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கக் கூடாது என நிர்வாக உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதனை விசாரித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம், 6-3 என்ற பெரும்பான்மை தீர்ப்பின் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவை ரத்து செய்து, பிறப்புரிமை குடியுரிமையை உறுதி செய்துள்ளது.
அரசியலமைப்பின் 14-வது திருத்தம் கூறுவது என்ன?
அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது திருத்தத்தின்படி, அங்கு பிறக்கும் அனைவரும் அந்நாட்டு சட்ட வரம்பிற்குள் வருவதால் குடியுரிமை என்பது அவர்களின் அடிப்படை உரிமை என தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
எனினும், இந்தத் தீர்ப்பை எதிர்க்கும் டிரம்ப், அரசியலமைப்பை திருத்தாமல் நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்றுவதன் மூலம் இதற்கு தடை விதிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
"பிரசவ சுற்றுலா" விவகாரத்தில் எச்சரிக்கை
அதேவேளையில், குடியுரிமைக்காக மட்டுமே அமெரிக்கா வரும் "பிரசவ சுற்றுலா" (Birth Tourism) போன்ற முறைகேடுகள் தடுக்கப்படும் என அமெரிக்க நீதித்துறை எச்சரித்துள்ளது.
இந்த தீர்ப்பு H-1B போன்ற தற்காலிக விசாக்களில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கு தற்காலிக நிம்மதியை அளித்துள்ளது.
=====