"இந்தியா மீது 100% இறக்குமதி வரி" : ரஷ்யாவின் வருவாயை முடக்க அமெரிக்க வியூகம் : செனட்டில் மசோதா, டிரம்ப் வரவேற்பு..!

ரஷ்யாவை முடக்கும் வகையில் அந்நாட்டிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா உட்பட 5 நாடுகள் மீது 100% இறக்குமதி வரி விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
USA decided to impose 100% import duty on five countries, including India crippling Russian economy
USA decided to impose 100% import duty on five countries, including India crippling Russian economyAI generated
1 min read

5 நாடுகள் மீது 100% வரி

U.S. Senators unveil bill for 100% tariffs on India, four others for buying Russian oil

அமெரிக்க செனட் உறுப்பினர்களில் இரண்டு கட்சிகளையும் சேர்ந்த குழு ஒன்று இதற்கான முயற்சியை முன்னெடுத்து இருக்கிறது.

ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளை சேர்ந்த இவர்கள், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் இந்தியா, சீனா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, அசர்பைஜான் நாடுகள் மீது 100% வரை இறக்குமதி வரி விதிப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய மசோதா ஒன்றை கொண்டு வந்து இருக்கிறார்கள்.

கச்சா எண்ணெய் இறக்குமதி

இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களது எரிசக்தி தேவையை ஈடுசெய்ய ஈரான், அமெரிக்கா, ரஷ்யா, சவூதி அரேபியா போன்ற நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகின்றன.

விலையை குறைத்த ரஷ்யா

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரில், ரஷ்யா எண்ணெய் விலையைக் குறைத்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விற்பனை செய்து வந்தது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அமெரிக்கா, அதிக வரி விதிப்பதாக இந்தியாவை மிரட்டியதுடன் ரஷ்யாவுக்கு பல்வேறு தடைகளையும் விதித்தது.

ஈரான் போர் காரணமாக தளர்வு

இதற்கிடையே மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் காரணமாக, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் பெற்றுக்கொள்ள தற்காலிகமாக சலுகை அளித்தது.

செனட்டில் மசோதா அறிமுகம்

இந்த நிலையில், அமெரிக்க செனட் உறுப்பினர்களின் இருகட்சி குழு ஒன்று, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் இந்தியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் மீது 100% வரை இறக்குமதி வரி விதிக்க மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

ரஷ்யாவின் வருவாயை முடக்க திட்டம்

ரஷ்யா உக்ரைன் மீது நடத்திவரும் போருக்கான நிதி ஆதாரத்தை முடக்குவதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாகும். ரஷ்யா தனது எரிசக்தி ஏற்றுமதி மூலம் பெறும் வருவாயைக் கட்டுப்படுத்த அமெரிக்கா இந்த கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.

500% வரி பரிந்துரை - கைவிடப்பட்டது

முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட வரைவில், ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500% வரை மிகக் கடுமையான வரி விதிக்க முன்மொழியப்பட்டது.

ஆனால், உலகளாவிய வர்த்தகம் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளுடனான உறவைக் கருத்தில் கொண்டு, தற்போதைய திருத்தப்பட்ட மசோதாவில் இது 100% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதிபருக்கு அதிகாரம் வழங்கிய மசோதா

அமெரிக்க அதிபருக்கு இந்த வரிகளில் இருந்து விலக்கு அளிக்கும் சிறப்பு அதிகாரம் இந்த மசோதாவில் வழங்கப்பட்டுள்ளது.சர்வதேச உறவுகளைக் கருத்தில் கொண்டு அதிபர் தேவைப்பட்டால் சில நாடுகளுக்கு விலக்கு அளிக்கலாம்.

அதிபர் டிரம்ப் ஆதரவு

செனட் சபையில் கொண்டு வரப்பட்டுள்ள மசோதாவிற்கு அதிபர் ட்ரம்ப் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

=================

logo
Thamizh Alai
www.thamizhalai.in