ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கையில் வெற்றி : இன்னும் கடுமையாகத் தாக்குவோம் : டிரம்ப் அறிவிப்பு!

US Iran War Update in Tamil : வெள்ளை மாளிகையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , ஈரான் நடவடிக்கை போரில் வெற்றி எனவும் ,ஈரானை இன்னும் கடுமையாக தாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்
Victory in the war against Iran, we will attack Iran even harder - Donald Trump announces!
Victory in the war against Iran, we will attack Iran even harder - Donald Trump announces!gtoogle
1 min read

நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ட்ரம்ப்

US Iran War Update in Tamil : ஈரானுக்கு எதிரான போரில் இலக்கை நெருங்கி விட்டதாகவும், வெற்றியை கண்டு விட்டதாகவும் ,இன்னும் கடுமையாக ஈரானைத் தாக்குவோம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

ஆபரேஷன் எபிக் ஃபியூரி

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் பேசிய ட்ரம்ப் ஆபரேஷன் எபிக் ஃபியூரியின் நடவடிக்கைகள் குறித்து ஆரம்பத்தில் இருந்தே நமது இலக்குகள் முழுமயாக நிறைவேறும் என்று கூறி வந்தோம். நாம் தீவிரமாக இந்த போரில் முன்னேறி இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்

ஹோர்முஸ் விவாகரத்தில் இனி தலையிடமாட்டோம்

இதுகுறித்து பேசிய அதிபர் டிரம்ப் ஈரானின் முக்கிய கடல்சார் மற்றும் வான்வழித் திறன்களை அமெரிக்க படைகள் முற்றிலும் சிதைத்துள்ளதாகவும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் முக்கிய தலைவர்கள், பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த அவர்

ஈரான் நாட்டின் வலிமையான அதிகளவான ராணுவக் கட்டமைப்பை அமெரிக்க படைகள் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது என்றும், ஆயுதத் தொழிற்சாலைகளையும், ராக்கெட் ஏவுதளங்களையும் அமெரிக்க படைகள் துண்டு துண்டாகச் சிதறடித்துள்ளதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அதிபர் டிரம்ப், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் 3 வாரங்களில் முடிவடையக்கூடும் என்றும், ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் இனி அமெரிக்கா தலையிடாது எனவும் கூறினார்.

ஈரானை இன்னும் கடுமையாக தாக்குவோம்

வெள்ளை மாளிகையில் அந்நாட்டு மக்ளிடம் உரையாற்றிய அவர் ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாக்க மற்ற நாடுகளும் அமெரிக்காவுக்கு துணையாக இருக்க வேண்டும். 2-3 வாரங்கள் ஈரானை கடுமையாகத் தாக்கப் போகிறோம். அவர்களை ஆயுதங்கள் எதுவுமில்லாத கற்காலத்திற்கு மீண்டும் கொண்டுச் செல்லப்போகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in