பிரான்சில் கலவரம் மேக்ரோனின் தவறான வெளியுறவு கொள்கையே காரணம் : டிரம்ப் கருத்து...!

பிரான்சில் தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வர சூழலில் அது கலவரமாக மாறி அந்நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளதாக டிரம்ப் வேதனை ...
Violent Protests in France: Trump Warns America Could Face Similar Chaos
Violent Protests in France: Trump Warns America Could Face Similar ChaosGoogle
2 min read

பிரான்சில் தொடர் போராட்டம் :

பிரான்ஸில் கல்வித்துறை பிரச்சினைகள், வாழ்க்க செலவு உயர்வு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தொடங்கிய போராட்டங்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் சில இடங்களில் வன்முறை வெடித்ததால், கடைகள் சூறையாடப்பட்டதுடன், பொதுச் சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில், பிரான்ஸ் அரசின் குடியேற்றக் கொள்கையை கடுமையாக விமர்சித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் நடக்கும் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கல்வித்துறை பிரச்சினையில் தொடங்கிய போராட்டம் :

பிரான்ஸில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, போதிய அடிப்படை வசதிகள் இல்லாதது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது மாணவர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.

இதற்கிடையே, வாழ்க்கை செலவு அதிகரிப்பு, எரிபொருள் விலை உயர்வு, ஊதியம் மற்றும் பொது சேவைகள் தொடர்பான அதிருப்தியும் போராட்டத்தில் இணைந்தது.

பிரான்ஸ் பற்றி எரிகிறது – டிரம்ப் விமர்சனம் :

பிரான்ஸில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்களை சுட்டிக்காட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், குடியேற்ற கொள்கையை மையமாக வைத்து பிரான்ஸ் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தனது Truth Social சமூக வலைதளத்தில், “பிரான்ஸ் பற்றி எரிகிறது” என்று குறிப்பிட்ட அவர், கட்டுப்பாடற்ற குடியேற்றமே அங்கு நிலவும் பிரச்சினைகளுக்கு காரணம் என்ற கருத்தை முன்வைத்தார்.

மேலும், பிரான்ஸ் தனது எல்லைகளை மூடி, குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் குடியேற்ற விவகாரத்தில் தவறான அணுகுமுறையை கையாண்டுள்ளதாகவும் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

பாரிஸ் விரைவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நகரமாக மாறும் :

பிரான்ஸ் அதிபர் மேக்ரானிடம் தான் ஏற்கெனவே குடியேற்றம் தொடர்பாக எச்சரித்ததாகக் கூறிய டிரம்ப், பாரிஸ் விரைவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நகரமாக மாறிவிடும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த கருத்து சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிலும் இதே நிலை ஏற்படலாம் – டிரம்ப் எச்சரிக்கை :

கன்சாஸ் மாநிலத்தில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் பேசிய டிரம்ப், பிரான்ஸில் ஏற்பட்டுள்ள வன்முறையை அமெரிக்காவின் அரசியல் சூழலுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெற்றால், பிரான்ஸில் ஏற்பட்டுள்ளதை போன்ற குழப்பம் அமெரிக்காவிலும் ஏற்படலாம் என்று அவர் எச்சரித்தார்.

பிரான்ஸ் ஒரு காலத்தில் சிறந்த நாடாக இருந்ததாகக் குறிப்பிட்ட டிரம்ப், தற்போது குடியேறிகள் மற்றும் பல்வேறு அரசியல் குழுக்களால் அந்நாடு பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

பிரான்ஸ் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

போராட்டங்களை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் பிரான்ஸ் அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

சில நகரங்களில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு இரவு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்தும் அரசு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

===================

logo
Thamizh Alai
www.thamizhalai.in