ஈரான் இஸ்ரேல் மோதல்
Iran Israel War : ஈரான் இஸ்ரேல் அமெரிக்க நீடித்து வரும் போரால் ஈரானின் ‘ரெட் க்ரெசன்ட் சொசைட்டி’ (Red Crescent Society) (மார்ச் 2, 2026) வெளியிட்ட அறிக்கையின் படி ‘இஸ்லாமியக் குடியரசான ஈரானை இலக்காகக் கொண்டு அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 555 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 131 நகரங்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் அணு நிலையம் மீதும் தாக்குதல்
தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து ஈரான் அணு நிலையம் மீதும் தாக்குதலை நிகழ்த்தி உள்ளது.
ஈரானின் மூத்த தலைவர் கொலை
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க படைகள் திடீர் தாக்குதலை நடத்தியது .தொடர் தாக்குதலில் ஈரான் தலைவர் கமேனி மற்றும் அமைச்சர்கள் பலரும் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது .இத்தாக்குதலில் பள்ளி மாண்வர்கள் பலரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ் தள பதிவு
தொடர்ந்து வரும் போர் குறித்து தந்து எக்ஸ் தலத்தில் பதிவிட்டுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் காட்ஸ், ஈரான் உச்ச தலைவர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவரை உறுதியாக அவரை படுகொலை செய்வோம் என்றும் ,அவரது பெயர் என்னவாக இருந்தாலும், அவர் எங்கு பதுங்கியிருந்தாலும் அவரைத் தேடி அழிப்போம் எட்ன்றும் பதிவிட்டுள்ளார்,
மேலும் இது குறித்து பதிவிட்டுள்ள அவர் இதற்காக, நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து முழு பலத்துடன் செயல்படப் போவதாகவும் . தற்போதைய ஈரான் ஆட்சி தன்னை மீள்கட்டமைப்பதற்கான வாய்ப்புகளை நசுக்குவோம் என்றும் ஈரானிய மக்கள் இந்த ஆட்சியை தூக்கி எரிந்துவிட்டு புதிய ஆட்சியை அமைக்கும் சூழலை உருவாக்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.
5 வது நாளை எட்டியுள்ள ஈரான் இஸ்ரேல் போர்
ஈரான் - இஸ்ரேல் போரானது 5-வது நாளை எட்டியுள்ள நிலையில், உள்ளூர் ஊடகத்துக்கு பேட்டியளித்த ஈரான் மூத்த தலைவர் ஒருவர், “இஸ்ரேல் இன்று ஈரானின் பல்வேறு பகுதிகளிலும் லெபனானில் உள்ள குடியிருப்புப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல்களுக்கு அஞ்சி பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை. அமெரிக்கா மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர்களுடன் சமரசத்துக்கான எந்தவொரு அடித்தளமும் இல்லை. எங்கள் விருப்பப்படி இந்தப் போர் தொடரும்” என்று கூறியுள்ளார்.