Director Lokesh Kanagaraj Speech About Actor Suriya's Rolex Movie Update 
சினிமா

Rolex : சூர்யாவுடன் ‘ரோலக்ஸ்’ எப்போது? : லோகேஷ் கனகராஜ் பதில்

Lokesh Kanagaraj About Suriya's Rolex Movie : நடிகர் சூர்யாவுடன் விரைவில் இணைந்து பணியாற்ற ஆசையாக உள்ளது என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

MTM

Lokesh Kanagaraj About Suriya's Rolex Movie : ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகிறது. பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை வணிகரீதியாக வெற்றியாக்க படக்குழு தொடர்வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இந்தநிலையில் கோயம்புத்தூரில் நடந்த ஒன்றில் கலந்துகொண்டு லோகேஷ் கனகராஜ்(Lokesh Kanagaraj) பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது : சூர்யா உடன் பணிபுரிய வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆசையாக உள்ளது. 2005, 2006-ம் ஆண்டு கல்லூரி காலங்களில் சூர்யாவின் படங்களை தான் அதிகமாக திரையரங்கில் பார்த்திருக்கிறேன். ’காக்க காக்க’, ’மாயாவி’, ’பிதாமகன்’ இப்படி பல படங்களைச் சொல்லலாம். எனவே கண்டிப்பாக சூர்யாவுடன் பணிபுரிவேன். நாங்கள் இருவரும் எங்களுடைய படங்களையும் முடிக்க வேண்டும். நேரம் ஒத்துழைக்கும்போது நடக்கும் என்று நம்புகிறேன்.

மேலும் படிக்க : ராமதாஸ் வாழ்க்கை வரலாறு ‘அய்யா’ : திரைப்படமாக எடுக்கிறார் சேரன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த ‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ்(Rolex Guest Role) என்ற கௌரவ கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார் . அக்கதாபாத்திரத்தை வைத்து தனியாக ஒரு படம் பண்ணவிருப்பதாக ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். ‘ரோலக்ஸ்(Rolem Movie)’ என்ற கதாபாத்திரத்தின் பெயரையே படத்தின் தலைப்பாக இருக்கும் என்று அப்போது பேசப் பட்டது. லோகேஷ் கனகராஜின் தற்போதைய பேச்சு அது உறுதி செய்வதாக உள்ளது என சூர்யா ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.