தமிழ் திரைப்படங்கள் :
List Of Tamil Movies Released in 2025 : தமிழில் ஆண்டு தோறும் சுமார் 200 படங்கள் வரை வெளியாகின்றன. இவற்றில் நல்ல திரைக்கதை, நடிகர்கள், இயக்குநர்கள், இசை, பாடல்கள் ஆகியவற்றை வைத்து படங்கள் லாபகரமாக ஓடி, வெற்றியை குவிக்கின்றன.
8 படங்கள் மட்டுமே வசூலை குவித்தன :
அந்த வகையில் நடப்பாண்டு ஆகஸ்டு 31 வரை தமிழில் 175 படங்கள் ரிலீசாகி இருக்கின்றன. இவற்றில்(List Of Hit Movies 2025), ‛‛மதகஜராஜா, குடும்பஸ்தன், டிராகன், குட் பேட் அக்லி, டூரிஸ்ட் பேமிலி, மாமன், தலைவன் தலைவி, கூலி '' ஆகிய 8 படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக லாபகரமான வெற்றி படங்களாக அமைந்துள்ளன.
ரஜினியின் ’கூலி’ 500 கோடி? :
ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் 500 கோடியை(Coolie Movie Collection) வசூலித்து இருப்பதாக சொல்லப்படும் நிலையில், அஜித்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் சுமார் 300 கோடியை வசூலித்து இருந்தது. விடாமுயற்சி, ரெட்ரோ ஆகியவை 250 கோடியை எட்டிப் பிடித்தன. மற்ற 4 படங்களும் 100 கோடிக்கு கீழ் வசூல் பார்த்தன. இவை, குறைந்த பட்ஜெட் படங்கள் என்பதால், தயாரிப்பாளர்களுக்கு சிக்கல் இல்லை.
167 படங்கள் தோல்வியா?
மற்ற 167 படங்கள் தோல்விப் படங்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது(List Of Tamil Flop Films 2025). வெற்றி என்பது 10 சதவீதம் கூட இல்லாதது, காரணத்தை ஆராய வேண்டிய கட்டாயத்தில் தமிழ் திரையுலகம் உள்ளதை எடுத்துக் காட்டுகிறது.
வந்ததும் தெரியாது, போனதும் புரியாது :
பல படங்கள் எதற்காக தயாரிக்கப்படுகின்றன என்பது புரியாத புதிர். அந்தப் படங்கள் ஒரு நாளாவது ஓடுகிறதா என்பதும் கேள்விக்குறி. சில படங்களுக்கு டிரைலர் கூட வெளியிடப்படுவது கிடையாது. சில படங்களுக்கு செய்திகள் கூட வருவதில்லை, படம் வெளியான சில நாட்களில் வெற்றி அறிவிப்பு என்ற பெயரில் சந்திப்பு நடத்துவது கேலிக்கூத்தான ஒன்று.
ரசிகர்களிடம் வரவேற்பு பெறாத படங்களை 'பெய்டு விமர்சனம்' மூலம் தரமான படம் என விளம்பரப்படுத்துகிறார்கள். இப்படியான நிலைமை இந்த 2025ம் ஆண்டில் அதிகமாகவே இருப்பதை பார்க்க முடிகிறது.
மேலும் படிக்க : 500 கோடியை எட்டிய ‘கூலி’ திரைப்படம் : ரஜினிகாந்த் புதிய சாதனை
2025ல் 250 படங்கள் வெளியாக வாய்ப்பு :
2024ம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் 157 படங்கள் வெளியாகின. அதனுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டில் கூடுதலாக 18 படங்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2024ல் மொத்தமாக 234 படங்கள் வெளியாகி இருந்தன. இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையை மிஞ்சிவிடும் என்றே கூறப்படுகிறது. எப்படியும் 250 படங்கள் வரை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்க பெயரே தெரியாமல், வெளி வருவதும் தெரியாமல் போகும் படங்களை எதற்காக தயாரிக்கிறார்கள், யாருக்காக எடுக்கிறார்கள், அவர்கள் நோக்கம் என்ன என்பது, ரசிகர்களுக்கே விடை காண முடியாத புதிராக நிற்கிறது.
===============