
வசூலை குவித்த ‘கூலி’ :
Coolie Movie Box Office Collection Worldwide : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சுதந்திர தினத்திற்கு முன்பு வெளியான கூலி திரைப்படம், உலக அளவில் முதல் நாள் வசூலில் ரூ.151 கோடியை குவித்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கூலி’.
அனிருத் இசையமைத்த இந்தப் படத்தில் நாகார்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சௌபின் சாஹிர், ஷ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்தனர்.
லியோவை முந்திய கூலி :
முதல் நாளில் உலகளவில் ரூ.151 கோடி வசூலைக் குவித்து விஜய்யின் ‘லியோ’ படத்தின் முதல் நாள் வசூலை முந்தியது. மூன்று நாள்களில் ரூ.300 கோடி வசூலை வேகமாக எட்டிய தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது. முன்னதாக இந்தச் சாதனை விஜய்யின் ‘லியோ’ வசம் இருந்தது. இதன் மூலம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் தனது சொந்த சாதனையை முறியடித்தார்.
கூலி 500 கோடி வசூல் :
இதனிடையே கூலி திரைப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ரூ.500 கோடி மைல் கல்லைத் தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது(Coolie Movie Box Office Collection). இதன் மூலம் ரூ.500 கோடி கிளப்பில் நுழைந்த நான்காவது தமிழ் படமாகவும் ரஜினிகாந்தின் மூன்றாவது படமாகவும் ‘கூலி’ அமைகிறது.
மூன்று படங்கள் 500 கோடி வசூல் - ரஜினி :
கூலி திரைப்படத்தின் மூலம் ரஜினிமேலும் ஒரு புதிய சாதனையை தமிழில் வேறெந்த நடிகரும் செய்திடாத சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். அதாவது கூலி திரைப்படம் ஐநூறு கோடி வசூலிக்கும் நிலையில் தமிழ் சினிமாவிலேயே மூன்று முறை ஐநூறு கோடி வசூலை கொண்ட படங்களை கொடுத்த நடிகர் என்ற பெருமை அவருக்கு கிடைத்து இருக்கிறது.
ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியான 2 .0 திரைப்படம் ஐநூறு கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படம் கிட்டத்தட்ட 650 கோடி வரை வசூலித்தது.
மேலும் படிக்க : Coolie : ரஜினியின் ’கூலி’ 400 கோடி : விமர்சனங்களை தாண்டி வசூல்
அதைத்தொடர்ந்து ரஜினி -நெல்சன் காம்போவில் 2023 ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படமும் 600 கோடி வரை வசூலித்தது.
======