
ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம் :
Coolie Movie Box Office Collection Day 4 Update : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 50 ஆண்டுகால திரை வாழ்க்கையை நிறைவு செய்யும், காலகட்டத்தில் 'கூலி' திரைப்படம், வெளியானது. இவர் 1975ம் ஆண்டு 'அபூர்வ ராகங்கள்' என்ற படத்தில் அறிமுகமானார். அந்த படம் வெளியான அதே நாளில் ரஜினியின் 50வது படமான கூலி ரிலீஸ் ஆனது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
விமர்சனங்களை தாண்டி வசூல் :
’கூலி' திரைப்படம், முதல் நாளில், 151 கோடிகளை வசூல்(Coolie First Day) செய்து தமிழ் திரையுலகில் ஒரு படம் முதல் நாளில் அதிக வசூல் குவித்த படமாக வரலாறு படைத்தது.
கடந்த 14ம் தேதி இந்தியாவிலும், 13ம் தேதி வெளிநாடுகளிலும் கூலி படம் ரிசீலானது(Coolie Movie Release Date). கலவையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டாலும், வசூலில் குறையே இல்லை. தொடர்ந்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் 194.25 கோடி ரூபாய் வசூலித்துள்ளது(Coolie Movie 4th Day Box Office Collection). 4வது நாள் மட்டும் இந்தியாவில் 35 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
மேலும் படிக்க : Coolie: வசூலில் அசத்தும் ரஜினியின் கூலி : 2 நாட்களில் ரூ.250 கோடி!
தமிழ்நாட்டில் 100 கோடி வசூல் :
தமிழ் நாட்டில் மட்டும் 100 கோடி(Coolie Movie Collection in India) ரூபாயும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. உலகளவின் மொத்தம் இதுவரை 400 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
ஆயினும் அனைவரும் எதிர்பார்த்தபடி, ‘கூலி’ படம் ஆயிரம் கோடியை வசூலிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அடுத்த ஒரு வார வசூலை பொருத்தே, பாக்ஸ் ஆபிஸ் ஹிட் சாதனை தெரிய வரும்.
=============