Ravindra Jadeja Test Bowling Rankings 2025 : இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற, 2வது டெஸ்ட்டை இந்தியா கைப்பற்றியது. இந்தநிலையில், 3வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.
ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா :
15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார் ரவீந்திர ஜடேஜா. ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி 20 என அனைத்து விதமான போட்டிகளிலும் ஆல்ரவுண்டராகக்(All Rounder Ravindra Jadeja) கலக்கி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில், ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், புதிய சாதனை ஒன்றை ரவீந்திர ஜடேஜா(Ravindra Jadeja Record) படைத்துள்ளார். இங்கிலாந்து வீரர் ஆலி போப்பின் விக்கெட்டை சாய்த்ததன் மூலம் அவர் இந்த சாதனையை எட்டினார்.
611 விக்கெட்டுகளுடன் ஜடேஜா :
சர்வதேசக் கிரிக்கெட்டில் இது அவரின் 611 ஆவது விக்கெட். இதன் மூலம் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பவுலர்கள் பட்டியலில்(Indian Bowler Test Ranking) அவர் 5வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் ரவீந்திர ஜடேஜா, இதுவரை இந்திய அணிக்காக 361 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
இந்திய அணியின் வலிமை ஜடேஜா :
83 டெஸ்ட் போட்டிகளில் 326 விக்கெட்டுகள் என, 15 முறை 5 விக்கெட்டுகளையும், 3 முறை 10 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தி இருக்கிறார்.
அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில், அனில் கும்ப்ளே (953), அஸ்வின் (765), ஹர்பஜன் சிங் (707) மற்றும் கபில் தேவ் (687) ஆகியோர் முதல் நான்கு இடங்களில் இருக்க, ஐந்தாவது இடத்துக்கு ரவீந்திர ஜடேஜா(Ravindra Jadeja) முன்னேறி இருக்கிறார். இன்னும் ஓரிரு ஆண்டுகள் தொடர்ச்சியாக அவர் விளையாடினால், ஓரிரு இடங்கள் முன்னேற வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க : இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : இந்தியா வரலாற்று வெற்றி