தமி்ழ் மண்ணின் மைந்தர் சி.பி. ராதாகிருஷ்ணன் :
CP Radhakrishnan Take Oath As 15th Vice President Of India : தமிழ் மண்ணின் மைந்தரான சி.பி. ராதாகிருஷ்ணன், திருப்பூரில் 1957ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி பிறந்தவர். முன்னாள் குடியரசு தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நினைவாக அவரது பெயர் இவருக்கு சூட்டப்பட்டதாக அவரது தாயார் பெருமையுடன் தெரிவித்தார். CPR என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் அவரது முழுப்பெயர் சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன்(C.P. Radhakrishnan). ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) சுயம்சேவகராக தனது சமூக பணியை தொடங்கினார் சி.பி. ராதாகிருஷ்ணன்.
பாஜகவின் வளர்ச்சியில் சி.பி. ராதாகிருஷ்ணன் :
1974-ல் பாரதிய ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரானார்(CP Radhakrishnan Biography in Tamil). தென்னிந்தியாவில் பாஜகவின் வளர்ச்சியில் இவரது பங்கு மிகவும் முக்கியமானதாகும். 1996ல், சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழக பாஜகவின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். 1998 மற்றும் 1999ம் ஆண்டு என இரண்டு முறை கோவை தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு எம்பியாக பணியாற்றினார். அப்போது, ஜவுளித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவராகவும் அவர் பணியாற்றினார். பொதுத்துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு மற்றும் நிதிக்கான ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக இருந்தார். பங்குச் சந்தை ஊழலை விசாரிக்கும் நாடாளுமன்ற சிறப்புக் குழுவிலும் உறுப்பினராக இருந்து, தனது பணிகளை சிறப்பாக நிறைவேற்றினார்.
19,000 கி.மீ. ரதயாத்திரை :
2004 ஆண்டு, நாடாளுமன்றக் குழு சார்பாக ஐ.நா. பொதுச் சபையில் பங்கேற்று உரையாற்றி, இந்தியாவின் பெருமையை பறைசாற்றினார்.
2004 முதல் 2007 வரை தமிழக பாஜகவின் தலைவராக இவர் பொறுப்பு வகித்த காலத்தின், பட்டி தொட்டி எங்கும் அந்தக் கட்சியின் வளர்ச்சிகான விதை தூவப்பட்டது. பாஜக தலைவராக இருந்த போது, தமிழகம் முழுவதும் 19,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரத யாத்திரை நடத்தினார் சி.பி. ராதாகிருஷ்ணன். விளையாட்டு வீரரான ராதாகிருஷ்ணன் டேபிள் டென்னிஸில் கல்லூரி சாம்பியனாகவும், நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரராகவும் திகழ்ந்தவர்.
ஆளுநராக சி.பி. ராதாகிருஷ்ணன் :
2020 முதல் 2022 வரை, கேரளாவில் பாஜகவின் அகில இந்தியப் பொறுப்பாளராக பணியாற்றினார். பிரதமர் மோடியுடன் நெருக்கமான நட்புறவை கொண்டிருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்(CP Radhakrishnan Journey), 2023ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போது, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்திருக்கிறார். கடந்த ஆண்டு மகாராஷ்டிரா ஆளுநராக பொறுப்பேற்ற அவர், ஜெக்தீப் தன்கர் பதவி விலகியதால், 15வது குடியரசு துணை தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு வாக்களிப்பு :
இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி போட்டியிட்டார். 9ம் தேதி நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவில், சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு 452 வாக்குகள் கிடைத்தன. சுதர்சன் ரெட்டிக்கு 300 பேர் வாக்களித்தனர். 152 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக செப்டம்பர் 12ம் தேதி பொறுப்பேற்கிறார்(Vice President Of India CP Radhakrishnan Oath Date). இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் 14 பேர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்களித்து, அவரது அரசியல் நேர்மை, நற்பண்புகளுக்கு பெருமை சேர்த்தனர்.
பாஜகவால் தமிழர்களுக்கு பெருமை :
பழகுவதற்கு இனிமையான சி.பி. ராதாகிருஷ்ணன், உயர்ந்த அரசியலமைப்பு பதவியை ஏற்பது, அனைவருக்கும் பெருமை என்று எதிர்க்கட்சியினரும் வாழ்த்தி உள்ளனர். தமிழர்கள் உயரிய பொறுப்புக்கு வருவதில் எப்போதும் ஆதரவாக இருந்து வரும் பாரதிய ஜனதா கட்சி, சி.பி. ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவராக்கியதன் மூலம், தமிழர்கள் மீது கொண்டிருக்கும் உயரிய மதிப்பை மீண்டும் வெளிக்காட்டி இருக்கிறது. அப்துல் கலாம் இரண்டாவது முறையாக குடியரசு தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட போது பாஜக முழு ஆதரவை அளித்தது நினைவுகூரத்தக்கது.
தமிழர்களுக்கு எதிராக திமுக :
தேசிய அரசியலில் தமிழர் முக்கிய பொறுப்புக்கு வர வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அதற்கு எதிராக செயல்படுவது திமுகவின் வழக்கம். அப்துல் கலாம் 2வது முறை குடியரசு தலைவராக வாய்ப்பு இருந்த போது, அவரது வேட்பு மனுவை எதிர்க்க திமுக முடிவு செய்தது. தமிழில் கலாம் என்றால் குழப்பம் என்று பொருள் என்று கூறி அரசியல் செய்தார், அப்போது திமுக தலைவராக இருந்த கருணாநிதி. காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய அவர் செய்த தந்திரம் இது. இதைபோன்று தான் தமிழரான ஜி.கே. மூப்பனார் பிரதமராக அருமையான வாய்ப்பு கிடைத்தும், அதை தடுத்தது திமுக.
தவறுகளை தொடரும் திமுக :
இப்போதும் தமிழ், தமிழரின் பெருமையை எப்போதும் பேசும் திமுகவும், அதன் தலைவர் ஸ்டாலின், திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள தமிழக கட்சிகளும், சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு எதிராகவே வாக்களித்து இருக்கின்றன. தனது தந்தை கருணாநிதி செய்த தவறுகளை சரிசெய்ய முதல்வர் ஸ்டாலினும் தவறி விட்டார் என்பதே நிதர்சனம்.
மேலும் படிக்க : துணை ஜனாதிபதியாகிறார் C.P. ராதாகிருஷ்ணன் : குவியும் வாழ்த்துக்கள்
தமிழரை உயர்த்தும் பாஜக :
அதேசதயம், திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு நேர் மாறாக தகுதியுள்ள சிறப்பு வாய்ந்த தமிழரை குடியரசு துணை தலைவராக உயர்த்தி, அசைக்க முடியாத தனது அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.
தேசிய சித்தாந்தத்தில் பிடிப்பு :
குடியரசு துணை தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டதை “தேசியவாத சித்தாந்தத்தின்” வெற்றி என்று விவரித்த சி.பி. ராதாகிருஷ்ணன், தேசத்திற்கு ஆற்றிவரும் சேவையை விடாமுயற்சியுடன் தொடரப் போவதாக உறுதியேற்று இருக்கிறார்.
தமிழ்நாட்டிற்கு கிடைத்த வெற்றி :
தமிழகத்தை சேர்ந்த ஒரு தலைவர் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியை அலங்கரிக்கும் போது, அது வெறும் அரசியல் வெற்றி மட்டும் கிடையாது. தேசிய அரங்கில் தமிழகத்தின் பெருமையை பிரகாசிக்க செய்யும். சி.பி. ராதாகிருஷ்ணனின் வெற்றி தமிழ்நாட்டின் வெற்றியாகவே இனி வரலாற்றில் இடம்பெறும்
---------------------