PM Modi meets Google CEO Sundar pichai at India AI AI summit 2026 delhi  google
இந்தியா

பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை சந்திப்பு : AI தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு கூகுள் முழு ஆதரவு

PM Modi meets Google CEO Sundar Pichai at AI Summit 2026 : டெல்லியில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட சுந்தர் பிச்சை பிரதமர் மோடியை சந்தித்து உரையாடினார் .

Rohini

இது குறித்து சுந்தர் பிச்சை கூறியதாவது

PM Modi meets Google CEO Sundar Pichai at AI Summit 2026 : நாங்கள் மிகத் தெளிவான செய்தியுடன் வருகிறோம். நாங்கள் இந்தியாவுடன் ஒரு கூட்டாளியாக இருக்க விரும்புவதாகவும் , செயற்கை நுண்ணறிவு உடன் இந்தியாவுக்கு அசாதாரணமான பாதை மற்றும் வாய்ப்பு இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்றும் பிரதமரும் பேசியதை பகிர்ந்துகொண்டார்.

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு கூகுள் உடன் நிற்கும்

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு கூகுள் தரவு தொகுப்புகளை வழங்குதல், உள்ளூர் கூட்டாளர்களுடன் ஆராய்ச்சி நடத்துதல், இந்தியாவின் திறமைகளுக்கு வாய்ப்புகளை உருவாக்குதல் எனகூகுளின்பங்கு முழு அளவில் இருக்கும் என்றும் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு லட்சியங்களுக்கு கூகுள் நீண்டகால அடிப்படையில் ஒத்துழைப்பை வழங்கும்’’ எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க :AI Impact Summit 2026 : புதிய தொழில்நுட்பங்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் : பிரதமர் மோடி உறுதி

சுந்தர் பிச்சை எக்ஸ் தள பதிவு

செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா திரும்பதியதில் தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் எப்போதும் போல அன்பான வரவேற்பு இருந்தது. ஆவணங்களும் சிறப்பாக இருந்தன’’ என குறிப்பிட்டள்ளார்.

உச்சி மாநாடு தொடர்பாக பேசிய பிரதமர்

செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பேசிய பிரதமர் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை நமது நாட்டின் சேவை மற்றும் ஏற்றுமதிக்கு முதுகெலும்பாகவும் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்து சக்தியாகவும் இருந்து வருகிறது எனவும்

செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் அவுட்சோர்சிங் அலைகளால் இந்தியாவின் ஐடி துறை 2030-ம் ஆண்டுக்குள் 400 பில்லியன் டாலர்களை எட்டும் என்று ஏஐ சந்தை கணிப்புகள் தெரிவிக்கின்றன’’ என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க :ஐநா.வுக்கான இந்தியாவின் பங்களிப்புக்கு நன்றி : பெருமிதத்துடன் ஐநா பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ்

உலகளாவிய தெற்கில் நடத்தப்படும் முதல் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு

உலகளாவிய தெற்கில் நடத்தப்படும் முதல் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு புதுடெல்லியில் நடைபெற்று வருகிறது

அனைவருக்கும் நலன் அனைவருக்கும் மகிழ்ச்சி என்பதே இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருளாக அமைந்துள்ளது . இந்த உச்சி மாநாட்டில் 110க்கும் மேற்பட்ட நாடுகள், 30 சர்வதேச நிறுவனங்கள், 45 நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க :India AI Summit: 100 நாடுகள், 400 நிறுவனங்கள் : சாதிக்கும் இந்தியா