Prime Minister Narendra Modi on Donald Trump US Tariffs on India ANI
இந்தியா

விவாசாயிகளை காப்பதில் சமரசம் இல்லை : அமெரிக்காவுக்கு மோடி பதிலடி

PM Narendra Modi on Donald Trump Tariffs : என்ன விலை கொடுத்தேனும் விவசாயிகளை காப்பாற்றுவேன் என்று, அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்து இருக்கிறார்.

Kannan

இந்தியா மீது 50% வரி விதிப்பு :

PM Narendra Modi on Donald Trump Tariffs : ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பொருட்கள் மீது 25 சதவீத வரியை விதித்தார். ஆகஸ்டு 7 முதல் இது அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு இந்தியா மீது கூடுதலாக 25 சதவீதம், அதாவது 50 சதவீத வரி(US Tariffs on India) விதிப்புக்கான உத்தரவில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.

அமெரிக்காவுக்கு இந்தியா எதிர்ப்பு :

அமெரிக்காவின்(America Govt) நடவடிக்கை ஏற்கக்கூடியதல்ல. இது நியாயமற்றது. தேச நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும். நாட்டு மக்களின் எரிசக்தி தேவையை உறுதி செய்வதே அரசின் முக்கிய நோக்கம் என்று மத்திய அரசு விளக்கம் அளித்து இருந்தது.

எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு மாநாடு :

இந்தநிலையில், தலைநகர் டெல்லியில் எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, சர்வதேச மாநாடு(MS Swaminathan Manadu) நடந்தது. இதில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi), “எங்களைப் பொறுத்தவரை, விவசாயிகளின் நலனே, முதன்மையான முன்னுரிமை. விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் விவசாயிகளின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது.

எந்த விலை கொடுக்கவும் இந்தியா தயார் :

அதற்காக நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது எனக்குத் தெரியும். நான் அதற்குத் தயாராக இருக்கிறேன். மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு(US Agriculture Products in India) இந்தியாவில் அனுமதியில்லை. இதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

அமெரிக்காவுக்கு மோடி பதிலடி :

இந்தியப் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீதம் வரி விதித்த அமெரிக்காவுக்கும், அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கும் பதிலடி கொடுக்கும் வகையில், பிரதமர் மோடி(Modi on Trump) இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவாக விளக்கினார்.

மேலும் படிக்க : PM Modi Visit : பிரதமர் மோடி சீனா பயணம் : ’அமெரிக்காவுக்கு செக்’

எம்எஸ். சுவாமிநாதனுக்கு புகழாரம் :

நாட்டின் உணவுப் பாதுகாப்பை தனது வாழ்க்கையின் நோக்கமாக சுவாமிநாதன் கொண்டிருந்தார். அதன் தாக்கம் இந்திய விவசாயத்தில் எதிரொலித்து வருகிறது. டாக்டர் சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா(Bharat Ratna Award 2025) வழங்கி கவுரவிக்கும் வாய்ப்பு எங்கள் அரசிற்கு கிடைத்தது. இதை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன்” இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

=========