
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா :
PM Narendra Modi China Visit : கூடுதல் வரி விதிப்பு மூலம் இந்தியாவை மிரட்டும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த மத்திய பாஜக அரசு தயாராகி வருகிறது. அமெரிக்காவுடனான ஏற்றுமதி பாதிக்கப்பட்டால், அதற்கு பதிலாக வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்கவும் வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி சீனா பயணம் :
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை தொடரும் முடிவு உள்ள இந்தியா, அமெரிக்காவின் பகை நாடுகளில் ஒன்றாக கருதப்படும், சீனாவுடன் உறவை புதுப்பிக்கவும் முடிவு செய்துள்ளது. இதன் ஒருபகுதியாக பிரதமர் நரேந்திர மோடி, ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை சீனாவில் உள்ள தியான்ஜினுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ஷாங்காய் மாநாட்டில் மோடி :
இந்த பயணத்தின் போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இதற்கு முன்பு 2029ம் ஆண்டு பிரதமர் மோடி(Narendra Modi) சீனா சென்றிருந்தார். லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டனர். இதில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. தற்போது விரிசல் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வரும் நிலையில், பிரதமர் மோடியின் சீனா செல்லும் முடிவு முக்கிய அரசியல் திருப்பமாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுக்கு செக், சீனாவுடன் கைகோர்ப்பு :
அதாவது வரி விஷயத்தில் அமெரிக்காவின் நெருக்கடி இந்தியாவுக்கு அதிகமாக இருக்கிறது. இதனை சமாளிக்க மத்திய அரசு, சீனாவுடன் நெருக்கமான வர்த்தக உறவுகளை ஏற்படுத்த முயற்சிக்கலாம் என பேசப்பட்டு வருகிறது. எனவே இந்த சந்திப்பில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தெரிகிறது.
மேலும் படிக்க : தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் : பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
புதின் - ஜின்பி்ங் - மோடி சந்திப்பு :
இம்மாநாட்டின் போது ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஷீ ஜின்பிங்(Xi Jinping) ஆகியோரையும் பிரதமர் மோடி சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இந்த பயணத்துக்கு முன்னதாக ஆகஸ்டு 30ம் தேதி பிரதமர் மோடி ஜப்பானுக்கும் அரசு முறைப்பயணம் மேற்கொள்கிறார்.
=====