ADMK Chief Edappadi Palanisamy Condemns DMK Government on Rameswaram Girl Student Murder Incident News in Tamil 
தமிழ்நாடு

பள்ளி மாணவிக்கு கூட பாதுகாப்பு இல்லாத அவலநிலை?: திமுக அரசுக்கு EPS

Edappadi Palanisamy on Rameswaram Girl Murder : தமிழகத்தில் பள்ளி மாணவிக்கு கூட பாதுகாப்பு இல்லாத அவலநிலை இருப்பதாகவும், அதற்கு யார் பொறுப்பு என்றும், எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Kannan

பாதுகாப்பில்லாத அவலநிலை?

EPS Condemns DMK Government on Rameswaram Girl Student Murder : ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த 12ம் வகுப்பு மாணவி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ”12ம் வகுப்பு மாணவியை வாலிபர் கத்தியால் குத்திப் படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத ஒரு அவல நிலைக்கு யார் பொறுப்பு?

துணிச்சல் எவ்வாறு வருகிறது?

பட்டப்பகலில் பள்ளி மாணவியை கொலை செய்யும் அளவிற்கு, குற்றவாளிக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது? ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கையும் பெண்கள் பாதுகாப்பையும் முழுமையாக குழி தோண்டி புதைத்துவிட்டதே இத்தகைய கொடூரக் குற்றச் செயல்களுக்கு முழுமுதற் காரணம்.

பெண்களுக்கு பாதுகாப்பில்லை

திமுக ஆட்சியில், 'உங்கள் ஆட்சியில் அடுத்த நிமிடம் பாதுகாப்பாக இருக்க முடியுமா?' என்ற அச்சத்துடனே ஒவ்வொரு பொழுதையும் பெண்கள் கடக்க வேண்டிய அவலச் சூழல், தமிழகத்திற்கு தலைகுனிவு இல்லையா?

வெட்கித் தலைகுனிய வேண்டாமா?

இதற்கு நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டாமா? பெண்ணியம் போற்றும் தமிழகத்தை, பெண்கள் பாதுகாப்பாக நடமாடவே முடியாத மாநிலமாக மாற்றிவிட்டீர்களே. இது உங்களை உறுத்தவில்லையா?

மேலும் படிக்க : பிளஸ் 2 மாணவி படுகொலை: ஒருதலை காதலால் நடந்தேறிய கொடூரம்!

கொலையாளிக்கு உச்சபட்ச தண்டனை

ராமேஸ்வரம் பள்ளி மாணவியைக் கொலை செய்த குற்றவாளிக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அந்த அறிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

=====================