Greater Chennai Corporation Provides 32 Services Through WhatsApp Governance 
தமிழ்நாடு

வாட்ஸ்ஆப் மூலம் அரசு சேவைகள் : சென்னை மாநகராட்சியில் தொடக்கம்

Greater Chennai Corporation WhatsApp Number Service : வாட்ஸ்ஆப் மூலம் சொத்து வரி, தொழில் வரி, பிறப்பு சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட சேவைகளைப் பெறும் வசதி சென்னை மாநகராட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

MTM

சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பு :

Greater Chennai Corporation WhatsApp Number Service : சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்பின்படி, வாட்ஸ்ஆப் வழியாக அரசு சேவை வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா(Mayor Priya), ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதில், வாட்ஸ்ஆப்(WhatsApp) மூலம் சொத்து வரி, தொழில் வரி, பிறப்பு சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட சேவைகளைப் பெற முடியும்.

சென்னை மாநகராட்சி வாட்ஸ்ஆப் எண் :

இதற்காக சென்னை மாநகராட்சி 94450 61913 என்ற வாட்ஸ்ஆப் எண்ணை(Chennai Corporation WhatsApp Number) அறிமுகம் செய்துள்ளது. அரசு சேவைகளை வாட்ஸ்-ஆப் மூலமே பெறும் வகையிலான ஒப்பந்தம் தமிழக அரசுக்கும் மெட்டா நிறுவனத்துக்கும்(Meta Business) இடையே கையெழுத்தானதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி சார்பில் இந்த திட்டம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : 150 கோடி வரி முறைகேடு : மதுரை மேயருக்கு எதிராக அதிமுக போர்க்கொடி

பினாக்கில் வாட்ஸ்அப் சேவை கம்பெனி :

இந்தநிகழ்வில், மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், நிலைக்குழுத் தலைவர் (வரிவிதிப்பு (ம) நிதி) சர்பஜெயாதாஸ் நரேந்திரன் , துணை ஆணையாளர்கள் , பினாக்கில் வாட்ஸ்அப் சேவை கம்பெனி சௌத் இந்தியா(WhatsApp Company) ஹெட் கௌரி சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க : தூய்மை பணியாளர்கள் சார்பாக வழக்கு : சென்னை மாநகராட்சிக்கு நோட்டீஸ்